நீடித்த மகிழ்ச்சிக்காக நிரந்தர ஒளியேற்ற புது நிமிர்வுடன் உழைப்போம் : தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 6th, 2018

எமது மக்களின் வாழ்வில் நிரந்தர ஒளிவீசும் நீடித்த மகிழ்ச்சியின் வருகைக்காக புது நிமிர்வுடன் உழைப்போம் என்ற உறுதியுடன் பிறந்திருக்கும் தீபாவளித் திருநாளை நம்பிக்கையுடன் வரவேற்போம் என மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது தீபாவளி தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில் –

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்… தர்மம் மறுபடி வெல்லும்.  எமது மக்களின் மனங்களில் விதைக்கப்பட்ட இந்த நம்பிக்கை முழுமையாக வெல்லும் காலத்தை நோக்கி நகர்ந்து செல்கிறது. எமது வரலாற்று வாழ்விடங்களில் மாற்றங்கள் நிகழ வேண்டும். வாழ்வெங்கும் துயர்களும் வலிகளும் வதைகளும் சுமந்த எமது மக்களின் இல்லங்கள் தோறும் நிரந்தர தீப ஒளிகள் ஏற்றப்பட வேண்டும்.

எஞ்சிய நிலங்கள் மீட்கப்படவேண்டும், அங்கெல்லாம் மக்களின் மீள்குடியேற்றங்கள் நிகழ வேண்டும். வளம் செழிக்கும் மாற்றமாக எமது மக்களின் வாழ்வியல் புனரமைப்பப்படவேண்டும். வறுமை அகன்று பொருளாதார அபிவிருத்தியை எமது மக்கள் அனுபவிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு, மற்றும் தொழிற்றுறைகள் ஊக்குவிக்கப்படவேண்டும் சிறைக் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும். எமது மக்களின் கலை காலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். காணாமல் போனோரின் உறவுகளின் கண்ணீருக்கு பரிகாரம் பெற்றுக்கொடுக்க வேண்டும். தடைகளை வென்று எம்மால் தொடரப்பட்ட பணிகளை விட்ட குறையில் இருந்து முன்னெடுத்து முடிந்தளவு முயற்சியின் வெற்றிகளை காண்போம் என்றும்.

நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய எமது இலட்சியப்பயணத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொது நோக்கில்,எமது மக்களின் வரலாற்று வாழ்விடங்கள் தோறும் மகிழ்ச்சி மிக்க மாற்றங்களை உருவாக்க உழைப்பேன் என்ற உறுதியோடும், பிறந்திருக்கும் தீபாவளித்திருநாளை கொண்டாடும் மக்களின் மனங்களில் நம்பிக்கை ஒளி ஏற்றி வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Related posts:

மாற்று வலுவுள்ளவர்களின் வாழ்வியலில் மாற்றங்களை கொண்டுவரும் எமது பணிகள் தொடரும் - டக்ளஸ் தேவானந்தா!
மன்னார் மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் உண்மைகளும் தோண்டி எடுக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்...
உணர்வுகளுக்கு மதிப்பளித்தே எனது தீர்மானங்கள் அமையும் – போராட்டத்தை முன்னெடுத்திருந்த கடற்றொழிலாளர்கள...