நீங்கள் நம்பியவர்கள் உங்களை ஏமாற்றி விட்டனர்: வெள்ளாங்குளத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!

Thursday, July 30th, 2020

உங்கள் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை என்பதனை பார்க்கும் போது அதனை கேட்கும்போது, கடந்த காலங்களில் தவறான தெரிவுகளையே மேற்கொண்டுள்ளீர்கள் என்பதனை என்னால்  புரிந்து கொள்ள முடிகின்றது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த காலங்களில் நீங்கள் நம்பியவர்கள் உங்களை ஏமாற்றி விட்டனர் என்று தெரிவித்தார்.

இன்றையதினம் மன்னார் மாவட்டத்திற்கான தேர்தல் பிரசார நடவடிக்கையை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மன்னார் மாவட்டத்தின் வெள்ளாங்குளம் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு மக்களது கருத்துக்களை கேட்டறிந்தபின் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் – “உங்கள் வாக்குகளை அபகரிப்பதற்காக நான் உங்கள் முன் இங்குவரவில்லை. எனது வார்த்தைகள் சத்தியமானவை. ஆகவே போலி வாக்குறுதிகளை கொண்டு வரவில்லை. நான் வாக்கு கேட்பது உங்களுக்காகவேயன்றி எனக்கு சொத்துகளை சேர்ப்பதற்காக அல்ல” எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வீணைச் சின்னத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்கொள்கின்ற நிலையில் இன்றையதினம் மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பரப்புரை கூட்டங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வீடமைப்புத் திட்டங்களில் வலது குறைந்தோருக்கென பிரவேச வசதிகள் தேவை - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்த...
குரங்கின் கை பூமாலை பிணத்துக்குக் கூட உதவாது - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
ஜெனீவா பிரேரணை எதிர்ப்பதற்கும் வரவேற்பதற்கும் எதுவுமில்லாதது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.சுட்டிக்க...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் -  டக்ளஸ் தேவானந...
உருத்திராட்ச மாலை அணிந்த பூனைககள் மக்களை தவறாக வழிநடத்த முற்படுகின்றன - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி....
பாண்டிச்சேரி - காங்கேசன்துறை படகுச் சேவை எந்த நேரத்திலும் ஆரம்பிக்கப்படலாம் - அமைச்சர் டக்ளஸ் தெரிவி...