நீங்கள் உருவாக்கிக் கொடுத்த வாழ்வினையே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மனமுருகி வாழ்த்து தெரிவித்த காவலூர் மக்கள்!

Friday, June 26th, 2020

நீங்கள் உருவாக்கிக் கொடுத்த வாழ்வினையே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதேபோல எதிர்காலத்திலும் நீங்கள் இருக்கும் நம்பிக்கையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கி்றோம் என ஊர்காவற்றுறை மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஊர்காவற்றுறை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பிரசார நடவடிக்கையை முன்னெடுத்துவரும் நிலையில் தெற்கு நாரந்தனை, சூரியவத்தை மக்களே இவ்வாறு தெரிவித்துள்ளர்.

மேலும் அவகள் கூறுகையில் –

எமது பிரதேசத்தில் படித்த இளைஞர் யுவதிகளுக்கு பலர் இருக்கின்றனர். அவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்த அவர்களது எதிர்காலத்திற்கு ஔியேற்றுங்கள்” என்று தெரிவித்த அவர்கள் 90 களின் ஆரம்பத்திலிருந்து குறித்த பிரதேசத்தின் நன்மை தீமைகள் அனைத்திலும் ஒன்றாக இருக்கும் அமைச்சருக்கு எமது நலக்களில் அதிக அக்கறை செலுத்தவார் என்றும்  ஊர்காவற்துறை பிரதேசத்தை சேர்ந்தவர் மனமுருகி வாழ்த்தினர்.

அத்துன் குறித்த பிரதேசத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக பிரதேச மக்களினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: