நிவர் புயல் பாதிப்புக்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவதானம்!

நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொண்டு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த இயற்கை அனர்த்தம் காரணமாக பாரிய பாதிப்புக்கள் ஏற்படாத போதிலும் எழுவைதீவு பகுதியில் சுமார் மூன்று வீடுகள் பாதிப்படைந்துள்ளன.
இதுதொடர்பாக கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் குறித்த விடயத்தினை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை தொடர்பாக ஆராயுமாறு ஊர்காவற்துறை பிரதேச சபை தலைவர் ஜெயக்காந்தனுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு நேரடியாக விஜயம் மேற்கொண்ட ஊர்காவற்துறை பிரதேச சபைத் தலைவர், நிலமைகளை ஆராய்ந்ததுடன் அவை தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிராந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|