நிலையற்ற அரசியல் தலைமையே வடக்கின் சமூக சீர்கேடுகளுக்குக் காரணம் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Parliament Friday, July 6th, 2018

எமது பகுதியில் தினந்தோறும் நடந்தேறி வருகின்ற சமூகச் சீர்கேடுகளுக்கு நிலையற்ற – கொள்கையற்ற தலைமைத்துவமே காரணமாக இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் மற்றும் தேர்தல் முறைகள் பற்றிய சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எமது பகுதியில் தினந்தோறும் நடந்தேறி வருகின்ற சமூகச் சீர்Nடுகளுக்கு நிலையற்ற – கொள்கையற்ற தலைமைத்துவமே காரணமாக இருக்கின்றது. எமது மக்களுக்கான தலைமைத்துவம் என்பது எமது மக்களை நேர்வழிப்படுத்தி, முன்னேற்றப் பாதையில் எமது மக்களை அழைத்துச் செல்வதாக இருத்தல் வேண்டும். எமது மக்களுக்கான நேரிய வழியிiனைக் வகுத்துக் கொடுப்பதற்காகவே நாம் அரசியல் பிவேசம் செய்துள்ளோம். எனினும், போதிய அளவு அரசியல் பலம் இல்லாத காரணத்திகால் எம்மால் முழுiமாயக செயற்பட இயலாதுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

இருப்பினும், எங்களுக்கு கிடைத்துள்ள அரசியல் அதிகாரங்களை நாங்கள் எமது மக்களுக்காகவே பயனுள்ள வகையில் பயன்படுத்தி வருகின்றோம். இதனை எமது மக்கள் உணர்ந்து வருவதாலேயே எமக்கான அரசியல் பலம் என்பது அதிகரித்து வர ஆரம்பித்துள்ளது.

எனவேதான், வடக்கு மாகாண சபையின் தற்போதைய ஆட்சிக் காலம் நிறைவுற்றதன் பின்னர் உடனடியாக வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை துரிதமாக நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையினை நாம் முன்வைத்து வருகின்றோம்.

இந்தச் சந்தர்ப்பத்தில் மாகாண சபையின் தேர்தல்களை புதிய முறைமையின் கீழ் நடாத்த வேண்டுமானால், அது தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற ஒரு நிலை காணப்படுகின்றது. எனவே, இத்தகைய காரணம் காட்டி பிற்போடாமல், புதிய தேர்தல் முறைமையில் உடனடி திருத்தங்களை மேற்கொண்டோ, அல்லது பழைய முறையில் திருத்தங்களை மேற்கொண்டோ உடனடியாக மாகாண சபை தேர்தல்களை நடத்தி முடிப்பது சிறந்த வழியாகும் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்திலே வலியுறுத்த விரும்புகின்றேன்.

அந்த வகையில், குறிப்பாக, கிழக்கு மகாண சபையின் ஆட்சி அதிகாரம் இன்னும் ஆளுநர் அவர்களின் கைகளிலேயே தொடர்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தற்போது ஆளுநர்களது கைகளில் ஆட்சியதிகாரங்கள் உள்ள ஏனைய அனைத்து மாகாண சபைகள் உள்ளிட்ட, இந்த வருடத்திற்குள் உத்தியோகப்பூர்வ ஆட்சி நிர்வாக காலம்  முடிவடைகின்ற ஏனைய மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை விரைந்து நடாத்தி அவற்றின் நிர்வாகங்களை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் வன்முறையைத் தூண்டுவதாக அமைந்துவிடக்கூடாது -நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவான...
நாட்டு நலன்களுக்கு இழப்புகள் ஏற்படாத வகையில் தேசிய பொறிமுறைஒன்றுஉருவாக்கப்படுவது அவசியமாகும் - கோப் ...
தவறுகள் திருத்தப்பட்டு புதிய அத்தியாயம் எழுதப்படவேண்டும் - திருமலையில் டக்ளஸ் தேவானந்தா !
நேசமுடன் எமது வர்த்தக சமூக உறவுகளுக்கு,.....
ஊர்காவற்துறைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்