நிறுத்தப்பட்டது உருளைக்கிழங்கு மானியம் – அரசின் திட்டங்களை உதாசீனம் செய்ய அனுமதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, January 9th, 2021

யாழ் மாவட்டத்திற்கு வழங்கப்படவிருந்த உருளைக்கிழங்கு மானியம் முறையற்ற நடவடிக்கை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரிடம் கருத்து கெட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – அமைச்சரவையில் எனது தனிப்பட்ட முயற்சியில் கொண்டுவரப்பட்ட உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்கான மானியத் திட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தாத நிலையில் குறித்த திட்டத்தை வெங்காயச் செய்கைக்கு வழங்குவதற்கு சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடியுள்ளேன்.

அரசாங்கத்தின் மானியங்கள் உரிய வகையில் ஏழை விவசாயிகளுக்கு சென்றடைய வேண்டுமே அல்லாமல் ஒரு தரப்பினரை இலக்காகக் கொண்டு மானியம் வழங்குவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக அரசினால் வழங்கப்பட்ட மானியத்தை வெங்காயச் செய்கைக்கு மாற்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


அணுகுமுறைகளே எமக்கான உரிமையையும் தீர்வுகளையும் வென்றெடுத்து தரும் - கட்சியின் தோழர்கள் மத்தியில் செ...
யாழில் கொரோனாவின் இரண்டாவது அலையை தடுப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துள்ள விஷேட...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ் அலுவலகம் வருகைதந்த முல்லைத்தீவு கடற்றொழில் அமைப்புகள்!