நிர்வாக அதிகாரிகள் தெரிவின்போது தமிழ் மொழி ரீதியான தெரிவுகள் புறக்கணிக்கப்படுகின்றதா?

Saturday, September 9th, 2017

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை மிக அதிகளவில் அதிகரித்துள்ள நிலையில், அண்மைக் காலங்களில் இவர்களது வேலைவாய்ப்புகளைக் கோரியதான போராட்டங்கள் மேற்படி மாகாணங்களில் தெரடர்ந்திருந்ததொரு நிலை காணப்பட்ட அதேவேளை, எமது நாட்டில் அரச நிறுவனங்களில் தமிழ் மொழி மூலமான கடமைப்பாடுகளை நிறைவேற்றுவதில் தமழ் மொழி சார்ந்த புலமைகள், பரிச்சயங்களையுடைய அதிகாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்களின் பற்றாக்குறைகள் காரணமாக தமிழ் மொழி மூலமான பரிச்சயங்களை மாத்திரம் கொண்ட மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் பாரிய பாதிப்புகளையும், சிரமங்களையும் தொடர்ந்து எதிர்நோக்கி வருகின்றனர். அந்தச் சிரமங்களை போக்குவதற்கு உரிய தரத்திலான பட்டதாரிகளை அரச வேலைவாப்பில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதமரிடம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளார்.

பிரதமரை நோக்கி முன்வைக்கப்படவுள்ள கேள்விகளில் விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த செயலாளர் நாயகம் தொடர்ந்து கூறுகையில், கல்வித்துறை சார்ந்த நிர்வாக ரீதியிலான அதிகாரிகளின் தெரிவுகளின்போதும் தமிழ் மொழி மூலமான தெரிவுகள் புறக்கணிக்கப் படுகின்றதொரு நிலை ஏற்பட்டு வருவதாகவே அத்துறை சார்ந்தோரால் தொடர்ந்தும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருவதையும் அடிக்கடி ஊடகங்களின் ஊடாக அறிய முடிகின்றது.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்ஹ பிரேமதாச அவர்களது காலத்தில, இன விகிதாசாரத்தின் அடிப்படையில்; அரச உத்தியோகஸ்தர்களுக்கான நியமனங்கள் இடம்பெற வேண்டும் என்பது தொடர்பிலான பொது நிர்வாக அமைச்சின் 1990/15ஆம் இலக்க சுற்றறிக்கை ஒன்று 25. 03. 1990ல் கொண்டு வரப்பட்டு, அது 1995ஆம் ஆண்டு வரையில் அமுலில் இருந்தது.

மேற்படி 1990ஃ15ஆம்; இலக்க சுற்றறிக்கையை மீண்டும் செயற்படுத்தி, அனைத்து அரச தொழிற்துறைகள் சார்ந்த நியமனங்களிலும் இன விகிதாசாரத்தைப் பேணுவதற்கு நடவடிக்கை எடுத்து உதவ முடியுமா? என்று கேள்வியை பிரமடரிடம் முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts:

வடக்கு - கிழக்கில்  விசேட தேவையுடைய நிலையில் வாழ்ந்துவரும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்ட...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக்களை மட்டுமன்றி தங்களது ஆதரவாளர்களையும் ஏமாற்றி வருகின்றது -...
ஊடகங்கள் கண்ணாடி போன்று பிரதிபலித்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கணிசமான தீர்வை எட்டுவேன்– டக்ளஸ் எம்ப...

யுத்தத்தின் எச்சங்களாக வாழும் எமது வாழ்வியலுக்கு விளக்கேற்றித் தாருங்கள் - டக்ளஸ் தேவானந்தாவிடம் முழ...
கடந்த கால யுத்தம் தேசிய நல்லிணக்கத்திற்கான பாடமாக அமைய வேண்டுமே அன்றி இன்னுமொரு யுத்தத்திற்கான பாலமா...
மணவைத்தம்பியின் தமிழ் மக்களுக்கான பங்களிப்புக்களை மீள நினைவுபடுத்திக் கொள்வதில் பெருமையடைகின்றேன் – ...