நியாயமான தீர்வைப் பெற்றுத் தாருங்கள் – யாழ் மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் டக்ளஸ் எம்.பியிடம் கோரிக்கை!

Monday, January 21st, 2019

சேவையை மேற்கொள்வதில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கும் இடர்பாடுகளுக்கும் தீர்வைப் பெற்றுத்தருமாறு யாழ் மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகைதந்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்த யாழ் மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் தமது சேவையின்போது தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தனர். இதன்போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில் –

யாழ்.மாவட்டத்தில் பல கிளைச் சங்கங்களுடன் தமது சேவையை தாம் முன்னெடுத்துவரும் நிலையில் தற்போது புதிய சேவைக்கட்டணங்கள் மற்றும் தரிப்பிட பிரச்சினைகள் என பல பிரச்சினைகள் உருவாகியுள்ளதால் அவை தமது சேவையை பெரிதும் பாதித்துள்ளது. இதனால் எமது குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் லீஷிங் முறையில் கொள்வனவு செய்த முச்சக்கரவண்டிகளின் தவணைக் கட்டணங்களையும் செலுத்தமுடியாத நிலையில் பலர் காணப்படுகின்றர்.

எனவே இவ்வாறான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தந்து எமது வாழ்வாதாரத்தை பாதுகாத்து தாருங்கள் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைவிடுத்தனர்.

குறித்த சங்கத்தினரது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய செயலாளர் நாயகம் காலக்கிரமத்தில் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுதர முயற்சிப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_20190120_172714

Related posts: