நியாயங்கள் எம்பக்கமே இருக்கின்றன என்பதை வரலாறு சுட்டிக்காட்டி நிற்கின்றது – டக்ளஸ் எம்.பி !

Sunday, February 4th, 2018

கடந்தகாலங்களில் என்மீதும் எம் கட்சி மீதும் சுமத்தப்பட்ட அவதூறான குற்றச்சாட்டுக்கள் எல்லாம் இன்று நீதிமன்ற விசாரணைகளுக்கூடாக  யார் செய்தார்கள் என்ற வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் நாம் நிரபராதிகள் என்பதை வரலாறு நிரூபித்துவருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை நவிண்டில் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பெருந்திரளாக குழுமியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்தகால தவறான தமிழ் அரசியல் தலைமைகளினது போக்கே எமது மக்களை கையேந்து நிலைக்கு இட்டுச் சென்றது.இந்த அவலத்திலிருந்து மக்ள மீட்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். ஒரு காலகட்டத்தில் ஆயுதப் போராட்த்திற்கான தேவை இருந்தது என்பது உண்மைதான். ஆனால் அது இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கவேண்டும்.

தொடர்ந்த ஆயுதப் போராட்டத்தினால் எமது மக்கள் விலைமதிக்க முடியாத உயிர்களையும் உடமைகளையும் இழந்து அவல வாழ்வுக்குள் தள்ளப்பட்டனர்.

அந்தவகையில் என்மீதும் கட்சி மீதும் திட்டமிட்ட வகையில் சில காழ்ப்புணர்ச்சி கொண்ட தமிழ் அரசியல்வாதிகளும் சில தமிழ் ஊடகங்களும் பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி எமது நற்பெயருக்கு கழங்கத்தை ஏற்படுத்தியிருந்தனர்.

ஆனால் நீதிமன்ற விசாரணைகளுக்கூடாக உண்மைகள் இன்று வெளிவந்தகொண்டிருக்கும் நிலையில் நியாயங்கள் எம்பக்கமே இருக்கின்றன என்பதை வரலாறு சுட்டிக்காட்டி நிற்கின்றது.

எனவே இது தேர்தல் காலம் என்பதால் எம்மீதான அவததூறுகளும் குற்றச்சாட்டுக்களையும் திட்மிட்டவகையில் கட்டவிழ்த்து விடப்படலாம். இதுவிடயத்தில் மக்கள் தெளிவடைய வேண்டும்.

ஒரு வண்டிலுக்கு இரண்டு சில்லுகள் இருக்கவெண்டும் என்பது போல உள்ளூராட்சி சபை ஒன்றுறாகவும்  மற்றயது வடக்கு மாகாணசபையாகவும் இருக்குமானால் அந்த வண்டியினூடாக மக்களுக்கான எதிர்காலத்தை நிச்சயம் நாம் வென்றெடுத்துக் கொடுப்போம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அந்தவகையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை மட்டுமல்லாது அடுத்து நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலிலும் எமது மக்கள் முழுமையான ஆதரவை எமக்கு தந்து எம்மை வெற்றிபெற செய்யவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு துரிதகதியில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில...
எதிர்கால சந்ததி ஒளிமயமாக வாழவேண்டும் என்பதற்காகவே கரடு முரடான பாதைகளைக் கடந்து உழைத்து வருகின்றேன் –...
யாழ் மாநகரசபை சுகாதார சிற்றூழியர் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவ...

பனங்கள் உற்பத்தி தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தமானது மீளப் பரிசீலிக்கப்பட வேண்டும் -  ச...
எமது மக்கள் நான் பயணிக்கும் பாதையை பலப்படுத்துவார்களாயின்தமிழ் மக்களின் எதிர்காலத்தை வெற்றிகொண்டு சா...
இலங்கை – இந்திய எல்லை தாண்டிய கடற்றொழிலாளர் விவகாரம்: இருநாட்டு கடற்றொழிலாளர்களது நலன்களும் பாதுகா...