நிதானமாக சிந்தித்து செயற்படும் நேர்மையான தமிழ் அரசியல்வாதி டக்ளஸ் தேவானந்தா!

Monday, December 18th, 2017

நிதானமாக சிந்தித்து செயற்படும் நேர்மையான தமிழ் அரசியல்வாதி டக்ளஸ் தேவானந்தா மட்டுமே என சுதுமலை தெற்கில் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு  சமகால அரசியல் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டத்தில் கருத்துரையாற்றிய ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நாம் நாட்டுப்பற்றுறுதி கொண்டவர்களாக நினைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வாக்களித்து அவர்களை வெற்றிபெறச் செய்தபோதும் அவர்கள் எம்மை ஏமாற்றிவிட்டனர். தேர்தல் காலங்களில் பல்வேறுபட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றித்தருவதாக கூறியிருந்த கூட்டமைப்பினர் எமது வாக்குகளை மட்டும் அபகரித்துக் கொண்டனரே தவிர எமது பிரச்சினைகள் எவற்றுக்கும் உரிய தீர்வுகளை பெற்றுத்தரவில்லை.

அந்தவகையில் நாம் கூட்டமைப்பினரால் ஏமாற்றப்பட்டோம் அல்லது வஞ்சிக்கப்பட்டு விட்டோம் என்றே எண்ணிக்கொள்ள முடிகின்றது என அவர் வருத்தம் தெரிவித்தார்.

இதன்போது உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா நாம் நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களை ஒருபோதும் மக்களுக்கு வாக்குறுதிகளாக வழங்கி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. நடைமுறைச் சாத்தியமான விடயங்களை கூறியபோது மக்கள் எம்மை நம்பாமல் கூட்டமைப்பினருக்கு வாக்களித்திருந்தனர்.

அதன்பலாபலன்களை எண்ணி மக்கள் இன்று தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த எமது கட்சிக்குப் பின்னால் அணிதிரண்டு வருகின்றனர்.

அந்தவகையில் மக்களை ஏமாற்றாது மக்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை நிச்சயம் நாம் பெற்றுத்தருவோம் என தெரிவித்தார்.

இம்மக்கள் சந்திப்பு நடைபெற்ற ஐங்கரன் கலையரங்கம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பாரிய நிதிப் பங்களிப்புடன் அமையப் பெற்றிருந்ததையும் அங்கிருந்த மக்கள் நன்றியுணர்வுடன் நினைவு கூர்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஆனைக்கோட்டை உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கும் டக்ளஸ் தேவானந்தா சென்று சமகால அரசியல் விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கட்சியின் வலிகாமம் தென்மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் வெலிச்சோர் அன்ரன் ஜோன்சன் (ஜீவா) கட்சியின் பகுதியின் வட்டார வேட்பாளர் சண்முகரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Related posts:

விடுதலை பெறும் வரையில்  தமிழ் அரசியல் கைதிகள் நீதியாக நடத்தப்பட வேண்டும்  - அமைச்சரிடம் டக்ளஸ் தேவான...
கூட்டமைப்பினரின் திட்டமிடப்ப டாத தீர்மானங்களால் மக்கள் ஏமாற்றப்பட்டுவருகினறனர்  - வவுனியாவில் டக்ளஸ்...
தமிழர் வாழ்விடங்கள் தோறும் புது மகிழ்ச்சி பொங்கிட தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் - வாழ்த்தச் செய்தி...