நாவலர் கலாசார மண்டப வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, August 5th, 2020

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நாடாளுமன்ற தேர்தல் இன்றையதினம் நடைபெற்றுவரும் நிலையில் யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் அமையப்பெற்றுள்ள வாக்குச் சாவடிக்கு இன்று காலை 10 மணியளவில் சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது வாக்கை செலுத்தியிருந்தார்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இதுவரை தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு கடந்த 26 வருடங்களாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாக்களித்த பின் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் –

Related posts: