நாளாந்த வருமானம் பெறுவோர் பாதிக்கப்படுவதை தடுக்க நிவாரணம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Sunday, March 22nd, 2020

கொரோனா வைரஸின் தொற்று காரணமாக முடக்கப்பட்டுள்ள நாளாந்த வருமானம் பெற்று குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்த மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் இதனை சமுர்த்தி மற்றும் கூட்டுறவு துறைகள் ஊடாக முன்னெடுக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணித்துள்ளார்.

இன்றையதினம் கொரோனா வைரஸ் தாக்ககத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விசேட உயர்மட்டக் கூட்டத்தின்போது ஊரடங்குச் சட்டத்தால் முடக்கப்பட்டுள்ள நாளாந்த வருமானம் பெறும் குடும்பங்களின் நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டபோதே அமைச்சர் இவ்வாறு பணித்துள்ளார்

மேலும் இது குறித்து அமைச்டசர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு உள்ளிட்ட நிவாரணங்களை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வலி வடக்கு மீள்குடியேற்றப்பட்ட பகுதி மக்களின் நிலைமைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா களஆய்வு!
மக்கள் குடியிருப்புக்களை அண்டிய பகுதிகளில் ஆயுதக் களஞ்சியங்கள் தவிர்க்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந...
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான துறைசார் தரப்பினருடன்...

யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் கடந்தபோதிலும் கடற்றொழி லாளர்களது பிரச்சினைகள் தீராதிருப்பது வேதனை யள...
சிறந்த அரசியல் சூழ்நிலை உருவாக்கப்படும் போதுதான் சமூக சீரழிவுகளைக் கட்டுப்படுத்த முடியும் - செயலாளர்...
அரசின் பொருளாதாரக் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் செயற்றிட்டங்களை முன்னெடுங்கள் – துறைசார் அதிகாரிக...