நாம் மக்களிடம் வாக்குக் கேட்பது மக்களின் நலன்களுக்காகவே – தம்பலகாமத்தில் டக்ளஸ் எம்.பி.
Saturday, January 6th, 2018நாம் மக்களிடம் வாக்குக் கேட்பது மக்களின் நலன்களுக்காகவே என்பதை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம் என்பது மட்டுமல்லாது அதையே எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டுள்ளோமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விஜயம் மேற்கொண்டுள்ள டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் திருகோணமலை தம்பலகாமத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
நாம் கடந்தகாலங்களில் கூட்டரசில் இணைந்துகொண்டாலும் அந்த அரசினது தேர்தல் விஞ்ஞாபனங்களை நாம் ஒருபோதும் கொண்டுசென்றதில்லை. மாறாக எமது கட்சியின் கொள்கைத்திட்டங்களையும் வேலைத்திட்டங்களையும் முன்னிறுத்தியே தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்து அவற்றை மக்களிடம் கொண்டுசென்றுள்ளோம்.
கடந்த காலங்களில் இம்மாவட்டத்தில் எம்மால் தொடர்ச்சியான அரசியல் வேலைத் திடட்டங்களை முன்னெடுக்க முடியாமல் போனமைக்கு இப்பகுதி மக்கள் எமக்கான அரசியல் ஆதரவுப் பலத்தை தரவில்லை.
ஆனால் இன்றுள்ள சூழலில் எமக்கு சாதகமான சூழ்நிலை இருக்கின்ற காரணத்தினால் இந்த மாவட்டத்தின் பிரதேச மக்களும் சரியாக உணர்ந்துகொண்டு எமக்கு ஆதரவுப்பலத்தை தந்து எம்மை வெற்றிபெற வைப்பார்களேயானால் நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை எம்மால் பெற்றுத்தரமுடியும் என்றும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|