நாம் ஒருபோதும் போலித் தேசியவாதம் பேசி மக்களை நிர்க்கதியாக்கவில்லை – டக்ளஸ் எம்.பி!

Monday, February 5th, 2018

மக்களின் வளமான எதிர்காலத்துக்கு சரியான தலமைத்துவத்தை கொடுக்க நாம் தயாராக இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இன்றைய தினம் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பின்வருமாறு தெரிவித்தார் அவர் தெரிவித்ததாவது :-

கடந்த காலங்களில் எமது மக்க்ளுக்கு சரியான  அரசியல் தலமை கிடைத்திருந்தால் நிச்சயம் மனிதப் பேரவலங்கள் நிகழ்ந்திருக்க மாட்டாது ஆனால் தவறான அரசியல் தலைவர்கள் தாமும் தவறாக நடந்தது மட்டுமின்றி மக்களையும் தவறாக வழி நடத்துகின்றனர்

இதன் பயனாகவே எமது மக்கள் விலைமதிக்க முடியாத உயிர்களை மட்டுமல்ல சொத்துகளையும் இழந்துள்ளனர் ஆனால் இன்றும் அதே தவறான அரசியல் தமிழ் தலமைகள் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றார்கள்

இந்த நிலையில் நாம் எமது மக்களை ஏமாற்றியோ புறந்தள்ளவோ விரும்பவில்லை நாம் ஒருபோதும் போலித் தேசியவாதம் பேசவோ மக்களிடம் வாக்குகளை சுரண்டி மக்களை நடுவீதியில் விடவோ நாம் விரும்பவில்லை எனவே தான் எமது மக்களின் எதிர்காலத்தை வளமான சுபீட்சமான எதிர்காலத்திற்கு சரியான அரசியல் தலமையை வழங்குகின்றோம் அதனூடாக மக்களுக்கான சரியான வழியைக்காட்டி அவர்களை பாதுகாத்து முன்கொண்டு வர நாம் தயாராக இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்  சுட்டிக்காட்டிள்ளார்

27848118_1666300353409045_2066328813_n

Related posts: