நாம் ஒருபோதும் பிரதி உபகாரங்களுக்காக எமது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்தது கிடையாது – சாவகச்சேரியில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, February 7th, 2018

நான் எப்போதும் நன்றிக்காகவோ பிரதி உபகாரங்களுக்காகவோ அன்றி தேர்தல் வெற்றிக்காகவோ எமது மக்களுக்கான சேவைகளை ஒருபோதும் முன்னெடுத்தது கிடையாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி வர்த்தக சங்க பிரதிநிதிகளை அவர்களது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

நான் எப்போதுமே நன்றிகளையும் பிரதி உபகாரங்களையும் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு வர்த்தகர்களுக்கோ அல்லது மக்களுக்கோ மேற்கொண்டது கிடையாது. அந்தவகையில்  சாவகச்சேரி நகர வர்த்தகர்களுக்கு மட்டுமல்லாது குடாநாட்டிலும் ஏனைய பகுதிகளிலும் வாழும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகவுமே நான் பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளேன்.

இதனூடாக அவர்களது வாழ்வு மட்டுமன்றி எமது சமூகமும் ஒரு மேம்பாடான நிலையை எட்டவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருந்துவருகின்றது. அந்தவகையில் எமது சமூகத்தை கையேந்து நிலையிலிருந்து சொந்தக் கால்களில் தலைநிமிர்ந்து வாழவைக்க வேண்டும் என்பதே எனது இலக்காக உள்ளது.

குடாநாட்டிலும் வட பகுதியிலும் யுத்தத்தின் கொடுமைகளுக்கு முகங்கொடுத்து எமது மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கம் போது அவர்களுக்கான மறுவாழ்வை  யுத்தத்தின் நிறைவுகாலகட்டத்தின் போதும் அதன் பின்னரும் வழங்கவேண்டிய பாரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டு அதை முடியுமானவரையில் செய்துகாட்டியிருக்கின்றேன்.

அந்தவகையில் எமது பணிகள் இன்றும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஆனாலும் எமது இதுபோன்ற நற்காரியங்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில சுயலாப தமிழ் அரசியல்வாதிகளும் சில தமிழ் ஊடகங்களும் திட்டமிட்டு எம்மீது அவதூறுப் பிரசாரங்களை முன்னெடுத்துவருகின்றன. இதுகண்டு நாம் ஒருபோதும் கவலைப்படவோ அன்றி அஞ்சவோ போவதில்லை என்றும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

e78e453d-d4b1-493a-a257-ef1e9d0eb412

Related posts:

வலி.வடக்கில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டப் பணிகளை டக்ளஸ் தேவானந்தா பார்வை!
தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவித்திருக்க வேண்டும் - ஜனாத...
தோழர் ஜெகனின் தந்தையாரின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரி...

ஊழல் மோசடி செய்ய வசதியாகவே 90 வீத நிதி வீதி அபிவிருத்திக்கு செலவிடப்படுகின்றது – டக்ளஸ் எம்.பி. சுட்...
ஈ.பி.டி.பி. கட்சிக்கு அளிக்கும் வாக்குகள் சர்வலோக நிவாரணியாக அமையும்: அடித்துச் சொல்கிறார் அமைச்சர் ...
வடமராட்சி பிரதேச கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நேரில் சென்று கள...