நாட்டில் இனவாதம் தோன்றுவதற்கு காரணம் தமிழ் சிங்கள அரசியல் தலைமைகளின் சுயலாபமே – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, December 22nd, 2017

தமிழ் மக்களின் அபிலாஷைகளை தமிழ் அரசியல் தலைமைகளும் சிங்களத் தலைமைகளும் தமது சுயநலத்துக்காகப் பாவித்ததன் காரணமாகவே இந்த நாட்டில் இனவாதம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்திருந்தது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது சமூகத்தில் தேவைப்பாடுகள் அதிகளவில் இருக்கின்ற நிலையில் அவற்றை நிவர்த்தி செய்வதற்காகவும் சமூகத்தை முன்னேற்றுவதற்காகவும் நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம்.

குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தை அபிவிருத்தியால் கட்டியெழுப்பவேண்டுமாயின் நாம் உள்ளூராட்சி மன்றங்களை வென்றெடுக்கவேண்டியது அவசியமானது. இதனைக் கருத்திற்கொண்டு மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டிய பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து அனைவரும் செயற்படவேண்டும்

ஒருகாலகட்டத்தில் எமது மக்கள் சுயபொருளாதாரத்தில் தலைநிமிர்ந்து வாழ்ந்துவந்த வரலாற்றை கொண்டிருந்தார்கள். ஆனால் பின்னையகாலங்களில் யுத்தம் காரணமாக எமது மக்கள் பாரிய பின்னடைவுகளை பல வழிகளிலும் சந்தித்திருந்தனர். அந்தவகையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை  தமிழ் அரசியல் தலைமைகளும் சிங்களத் தலைமைகளும் தமது சுயநலத்துக்காகப் பாவித்ததன் காரணமாகவே இந்த நாட்டில் இனவாதம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்திருந்தது . இதை எனது அனுபவத்தினூடாக கூறிக்கொள்கின்றேன் எனவும் சுட்டிக்காட்டினார்

இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts:


பயிரழிவுகளுக்கான நட்டஈடுகள் மற்றும் மானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ...
கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கெடுத்த...
கடலட்டைப் பண்ணைகளுக்காக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளை நேரடியாக சென்று கண்காணித்த அமைச்சர் டக்ளஸ்!