நாட்டின் முதலீட்டுச் சூழலின் குறைபாடுகளே அதிகரித்துச் செல்லும் வரிச் சுமைக்கு காரணம் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 25th, 2017

அரச கடன்களைச் செலுத்தவே இயலாதுள்ள நிலையில், மக்கள் செலுத்தகின்ற வரிகளுக்காக அந்த மக்களுக்குரிய சேவைகளையும் வழங்கவேண்டிய நிலையில், அரசு மேலும் கடன்களையே நாடுமானால் அது மேலும், மேலும் வரிச் சுமைகளையே எமது மக்கள்மீது சுமத்தும் என்பதில் ஐயமில்லை எனவே ஒழுங்கான – நிலையான நிதி முகாமைத்துவத்தினதும், எமது நாட்டுக்கு, தற்போதைய உலகளாவிய சூழ்நிலைக்கும் பொருந்தக்கூடிய தேசிய பொருளாதாரக் கொள்கையினதும் அவசியத்தையே இவை வலியுறுத்துகின்றன என்றே நான் எண்ணுகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றையதினம் ஏற்றுமதிகள், இறக்குமதிகள் , சேர் பெறுமதி வரி, உற்பத்திகள் வரி மற்றும் காணி சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வரி அதிகரிப்பு என்பது எமது நாட்டின் புறையோடிய பிரச்சினைக்கு ஒரு தற்காலிக நிவாரணமே அன்றி, நீடித்த, நிலைத்த தீர்வாக இது அமையாது. இதற்கு கொள்கை ரீதியிலான மறுசீரமைப்பே அவசியமாகிறது. இவ்வாறான கொள்கை மறுசீரமைப்பின் தேவை எமது நாட்டுக்கு இப்போதல்ல, 1984 – 1990 காலகட்டத்திலே அவசியமாகத் தேவைப்பட்டது. ஆனால் அது அவ்வாறு மேற்கொள்ளப்படவில்லை. இதன் விளைவாக எமது நாட்டில் ஏற்பட்ட மிகப் பாரியதொரு பிரச்சினை, முதலீடுகளில் முன்னேற்றம் காணப்படாமையாகும்.

கடந்த சுமார் 5 வருட காலங்களில் சுமார் 1500 டொலர் பில்லியன் முதலீடுகள் ஆசிய நாடுகள் நோக்கி  வந்துடைந்துள்ளதாகத் தெரிய வருகின்ற நிலையில், இதில் நூற்றுக்கு ஒரு வீதமாவது எமது நாட்டுக்குக் கிடைக்காமை இங்கு குறிப்பிடத்தக்கது. 5 வருடங்களையும் தாண்டி சுமார் 10 வருடங்களை எடுத்தக் கொண்டாலும், மேற்கூறிய வகையில் நூற்றுக்கு ஒரு வீதமான முதலீடுகள்கூட எமது நாட்டுக்குக் கிடைக்காத நிலையையே காணக்கூடியதாக இருக்கிறது. எமது நாட்டின் முதலீட்டுச் சூழலின் குறைபாடுகளே இதற்குக் காரணம் என்பதையும் இங்கு நான் குறிப்பிட விரும்பகின்றேன் உட்படுகின்றனர் என மேலும் தெரிவித்துள்ளார்.

Parliment-626x380 copy

Related posts: