நாட்டின் கல்வித்துறை இன்னமும் நவீன தொழிற்துறைகளுக்கு ஏதுவானதாக அமையவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, March 13th, 2019

நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருளான தேயிலைப் பயிர்ச் செய்கை தொடர்பில் போதிய அக்கறையில்லாமல் காணப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் கைவிடப்பட்ட நிலையே காணப்படுகின்றது.

தோட்டத் தொழிற்துறைகள் சார்ந்திருந்த மக்கள் பெருமளவில் இன்று அதிலிருந்து விடுபட்டு, வெவ்வேறு தொழிற்துறைகள் நாடிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த நாட்டின் கல்வித்துறை இன்னமும் நவீன தொழிற்துறைகளுக்கு ஏதுவான முறையில் இல்லாமல் இருக்கின்ற நிலையில், தேசிய கல்வி ஆணைக்குழுவும் செயற்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

மாகாண சபைத் தேர்தலை என்ன செய்வது என்பது தெரியாத நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு இயங்கி வருகின்றது.

எனவே, இத்தகைய ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக இயங்குவதற்குரிய வழிவகைகளை, குறிப்பாக அரசியல் நோக்கங்கள் அற்ற நியமனங்களின் ஊடாகவும், அரசியல் தலையீடுகள் அற்ற நிர்வாக முறைமையின் கீழும் உறுதிபடுத்தப்படல் வேண்டும் என்ற விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற ஜனாதிபதி, பிரதமர், சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளடங்கலாக 22 நிறுவனங்கள் தொடர்பிலான 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் மதிப்பீட்டின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கௌரவ ஜனாதிபதி அவர்களினதும், கௌரவ பிரதமர் அவர்களினதும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலும் கூறப்பட்டுள்ளது.

கௌரவ ஜனாதிபதி அவர்களின் கீழான நிதி ஒதுக்கீடுகள் கடந்த காலங்களில் இந்த நாட்டின் – நாட்டு மக்களின் நலன் கருதிய பல்வேறு பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதை அவதானிகக் முடிகின்றது. குறிப்பாக அவர் செல்கின்ற இடங்களில் மக்களால் முன்வைக்கப்படுகின்ற பல்வேறு தேவைகளை அவரால் காலதாமதமின்றி அம் மக்களுக்கு நிறைவேற்றப்பட்டு வருவதை நாம் அவதானிக்கின்றோம். அந்த வகையில் அவரது மேற்படி பணிகளை வரவேற்பதுடன், அவரது மக்கள் நலன் சார்ந்த பணிகள் மேற்படி நிதி ஒதுக்கீட்டின் ஊடாக மேலும் சிறக்க வேண்டும் என்றார்.

Related posts:


“சுரக்ச” காப்புறுதிக்கு காப்புறுதி இல்லை – ஊழலே மிஞ்சி இருக்கின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. ச...
முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களின் நலன் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ...
கிளிநொச்சி மாவட்டதில் ஒரு இலட்சம் காணித் துண்டுகள் திட்டத்திற்காக கோரப்பட்ட காணிகள் தொடர்பில் அமைச்ச...