நாட்டின் அனைத்துப் பகுதிகளும் வறுமையற்ற பகுதிகளாக மாற்றம் பெற வேண்டும் என்பதே எமது அபிலாஷை – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, November 15th, 2017

 

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் இன்று வறுமையின் ஆகக்கூடிய இருப்பிடங்களாக இருக்கின்றன.

தென் பகுதியிலே மொனராகலை – வறுமைக்கு மிகவும் பெயர் பெற்ற மாவட்டமாக இருந்தது. தகவல் தொலைத் தொடர்புகளில்கூட மிகவும் பின்தங்கிய மாவட்டமாக மொனராகலை மாவட்டம் காணப்பட்டது. இன்று அந்த நிலை மாற்றம் பெற்றிருக்கின்றதா? என்பது பற்றித் தெரியாது.

ஆனாலும், வறுமை நிலையிலிருந்து இன்று அந்த மாவட்டம் மீண்டிருக்கின்றது என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.இதே போன்றுதான் எமது பகுதிகள் உட்பட இந்த நாட்டின் அனைத்துப் பகுதிகளும் வறுமையற்ற பகுதிகளாக மாற்றம் பெற வேண்டும் என்ற அபிலாiஷ எம்மிடமும் உண்டு.

வளங்கள் இல்லாமல் ஒரு பகுதி, வறுமை நிலை  காண்பது வேறு! ஆனால், போதிய வளங்கள் இருந்தும், அந்த வளங்களைப் பயன்படுத்துவதற்கான தடைகள், இடையூறுகள், புறக்கணிப்புகள், ஆக்கிரமிப்புகள், சுரண்டல்கள் ஏற்படுமானால், அந்தப் பகுதி வேண்டுமென்றே – செயற்கையாகவே வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றது என்பதே அர்த்தமாகும்.

இந்த நிலைமைதான் இன்று எமது பகுதிகளுக்கும் நே
ர்ந்துள்ளது என்பதையே இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Untitled-9 copy

Related posts:


எண்ணை ஆய்வுகளாலும் இராணுவ ஒத்திகைகளாலும் கரையோர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது - டக்ளஸ் எம்....
ஈ.பி.டி.பி. இணைந்துள்ள ஆட்சியில் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படாது: திருமலை மக்கள் முன்னிலையில் அமைச்...
இந்திய கடற்றொழிலாளர் விவகாரத்தை சிலர் தவறாகச் சித்தரித்து வருகின்றனர் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்...