நாடு முழுமையாக நிமிராத நிலையிலும் பாதீட்டில் மக்கள் நலன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, November 18th, 2023

எமது நாட்டின் பொருளாதார நிலைமையானது, இன்னமும் முழுமையான சுமுக நிலைக்கு வந்துவிடவில்லை. அதனை சுமுக நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இந்த நிலையில் எமது தேசிய உற்பத்திகளை மேலும் வலுப்படுத்த வேண்டும். அதே நேரம், அரசாங்கத்தை நம்பி வாழ்கின்ற, அரச உதவிகளை, மானியங்களை, நிவாரணங்களைப் பெறுகின்ற மக்களை கைவிடவும் முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சரமான டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் தனது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

பல்துறை சார்ந்த பணியாளர்களை பேண வேண்டும். இத்தகைய நானாவித விடயங்களையும் தூர நோக்குடன் சிந்தித்து இந்த வரவு – செலவுத் திட்டத்தினை முன்வைத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களுக்கு எனதும், எனது மக்கள் சார்ந்ததுமான நன்றியினை இந்த சபையிலே  தெரிவித்தக் கொள்கின்றேன்.

அந்த வகையில், அரச ஊழியர்களது வாழ்க்கைச் செலவின கொடுப்பணவாது, 10,000 ரூபாவினாலும், ஓய்வூதியம் பெறுகின்றவர்களுக்கான கொடுப்பணவானது 2,500. ரூபாவினாலும், மாற்று வலு கொண்டவர்களுக்கான மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பணவானது 2,500 ரூபாவினாலும், மூத்த பிரஜைகளுக்கான கொடுப்பணவானது 1,000 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஆறுதல் (அஸ்வெசும) திட்டத்திற்கென முன்பு ஒதுக்கப்பட்ட 60 பில்லியன் ரூபாவினை 183 பில்லியன் ரூபா வரையிலும் அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், நாட்டின் பொருளாதார நிலை காரணமாக, சில வரையறைகளுக்கு உட்படுத்தப்படிருந்த அரச பணியாளர்களுக்கான அனர்த்த கடன் கொடுப்பனவானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்முதல் வழமைபோல மீண்டும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவு சங்க தலைமை அலுவலகம் மீள்பொலிவுற நடவடிக்கை எடுக்கப்படும் - டக்ள...
வடமாராட்சி வடக்கின் 13 கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையில் வ...
அதிகாரப் பகிர்வை இனவாதிகளே வலியுறுத்தும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். - அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!