மறைந்த தமிழக முதல்வருக்கு நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Tuesday, December 6th, 2016

ஆளுமைமிக்க பெண் தலைமைத்துவம் ஒன்றை தமிழக மக்கள் மட்டுமன்றி ஈழத்தமிழ் மக்கள் மட்டுமன்றி தெற்காசியாவே இழந்து விட்டது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் அவர்களது மறைவு குறித்து நாடாளுமன்றில் உரையாற்றுகையில் அனுதாபம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சு தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முதல்வரின் மறைவு குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில் –

நேற்றைய தினம் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் காலமாகிவிட்ட துயரச் செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். அந்த வகையில் இந்தச் சபையில் செல்வி ஜெயலலிதா அவர்களை நினைவு கூர்ந்து எமது மக்களின் சார்பாக அஞ்சலி மரியாதை செலுத்துகின்றேன். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

IMG_20161206_135259

IMG_20161206_134215

1

Related posts: