நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களுக்காக ஓங்கி ஒலித்த ஒரே ஒரு தமிழ் குரல்!

Tuesday, October 3rd, 2017

எமது நாட்டில் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்ற எமது மக்களின் பல்வேறு தேவைகள், பிரச்சினைகள் யாவும் எதிர்வரும் காலங்களில் விரைந்தும், படிப்படியாகவும் தீர்க்கப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை.

எமது நாட்டின் முதலாவது ஜனநாயக நாடாளுமன்றம் இன்று தனது 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. இந்த நாடாளுமன்றம் இன்னுமின்னும் தனது ஆண்டுகளை நிறைவு செய்து கொண்டு போகும். 100ஆவது வருடத்தையும் அது எட்டிவிடும். சில வருடங்களுக்கு நாங்கள் இருக்கலாம்.

ஆனால், தொடர்ந்தும் எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல்,  இந்த நாடாளுமன்றத்தில் வாத, விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ‘பேசு பொருளாக’ மாத்திரம் இருக்கக்கூடிய நிலை தொடரக் கூடாது என நான் வலியுறுத்தகிறேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முதலாவது ஜனநாயக நாடாளுமன்றத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்று நாடாளுமன்றில் விஷேட அமர்வாக அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தனது உரையில் தெரிவிக்கையில் –

70 ஆண்டு கால எமது முதலாவது ஜனநாயக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 23 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதியாக அங்கம் வகித்து வருகின்றேன். தங்களது தேவைகளை, பிரச்சினைகளைத் தீர்ப்பேன் என்றும், தங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்றும் எமது மக்கள் என்மீது நம்பிக்கை கொண்டு எனக்கு தொடர்ந்தும் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில், எமது மக்களது நம்பிக்கைக்குப் பாத்திரமாக நான் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றேன் என்பதற்கு எமது மக்களின் ஆதரவே சாட்சியாகும்  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நடைபெற்ற விஷேட நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர்  உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் உரையாற்றியிருந்தனர். இதன்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் உள்ளிட்டோரும் உரையாற்றியிருந்தனர். அனாலும் இன்றைய நாடாளுமன்ற சிறப்பு உரையின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமிழை மறந்து அங்கிலத்திலேயே உரையாற்றியிருந்தார்.

ஆனாலும் தமிழ் மக்களுக்காக உண்மையுடன் உழைக்கும் டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் இவ்வாறான சில சிறப்பு அமர்வுகளில் தேவைகருதி ஆங்கிலத்தில் உரையாற்றியிருந்தாலும் இன்றையதினம் தமிழ் மக்களின் உரிமையை நாடாளுமன்றில் நிலைநாட்டி தமிழில் உரையாற்றி தமிழுக்கும் இந்நாட்டில் சம உரிமை உள்ளது என்பதை ஆணித்தனமாக ஓங்கி ஒலிக்கச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தாவை சிங்கள தலைவர்கள் சிலர் பாராட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடக்கின் பாரிய நிதி மோசடிகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டது "சப்றா" நிறுவனமே - நாடாளுமன்றில...
மாங்குளம் வன்னி உணவகம் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தாருங்கள் – டக்ளஸ் எம்.பியிடம் ...
யாழ். நாவலர் கலாச்சார மண்டபம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பிரதமரின் இந்து மத விவகார இணை...