நஷ்ட ஈடுகள் தொடர்பிலாக சுற்றறிக்கையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் வலியுறுத்து!

Wednesday, January 9th, 2019

நட்டஈடு கொடுப்பனவுகள் தெடர்பான சுற்றறிக்கைகளின் பிரகாரம் ஒருமுறை நட்டஈடு பெற்றவர் மீண்டும் நட்டஈடு பெறுவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில் ஏற்கவே யுத்த சூழலால் பாதிக்கப்பட்டு நட்டஈடு பெற்றவர்கள் இவ் வெள்ள அனர்த்தத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கும் நட்டஈடுகள் பெறும் வகையில் சுற்றறிக்கை மாற்றியமைக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற இரசாயன ஆயுதங்கள் சமவாயம் தொடர்பான திருச்சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

அத்துடன், மேற்படி வெள்ளப் பாதிப்பிற்கு காரணமான இரணைமடுக் குள நீர் முகாமைத்துவத்தில் அரசியல்வாதியின் தலையீடு மற்றும் வெள்ளப் பாதிப்பிற்கான மேற்படி குள முகாமைத்துவத்தின் பங்களிப்பு தொடர்பிலும், ஏற்கனவே இரணைமடுக் குளப் புனரமைப்புப் பணிகளில் இதே அரசியல்வாதியின் ஊழல், மோசடிகள் தொடர்பில் குற்றச்சாட்டொன்று நிலவுவதால், அவ்விடயம் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்வதற்கென இரு விசாரணைக் குழுக்களை அமைக்குமாறும் இந்தச் சபையில் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும், கடந்தகால யுத்தம் காரணமாக முள்ளந்தண்டுகள் பாதிப்புகளினாலும், கைகள், கால்கள், கண்கள் பாதிப்பு மற்றும் இழப்புகளினாலும் வாழ்ந்து வருகின்ற எமது மக்களினதும், ஏனைய  மாற்றுத் திறனாளிகளினதும் மருத்துவ மற்றும் வாழ்வாதார ஏற்பாடுகள் கருதி தற்போதுள்ள அரச சலுகைகள், கொடுப்பனவுகள் தவிர்ந்த விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டு, துரித கதியில் அவை செயற்படுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு, விடைபெறுகின்றேன்.

Untitled-4

Related posts:

புங்குடுதீவு பாடசாலை மாணவி கேஷனாவின் மரணத்திற்கு வடக்கு மாகாணசபையே பொறுப்புக் கூறவேண்டும் - டக்ளஸ் எ...
கச்சதீவில் இலங்கை - இந்தியக் கடற்றொழிலாளர்கள் நல்லெண்ணச் சந்திப்பு - அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் ...
தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அமைச்ச...

செங்கிரிலா ஹோட்டலுக்காக இராணுவத் தலைமையகத்தையே மாற்ற முடியுமானால் எமது மக்களின் காணிகளை விடுவிக்க மு...
உரிய தீர்வை பெற்றுத்தாருங்கள்: டக்ளஸ் தேவானந்தாவிடம் கல்லுடைக்கும் ஆலை உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் ...
ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட புதிய சட்டவரைபு தற்போது தமிழிலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளத...