நவீன வசதிகளுடன் கூடைப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் – டக்ளஸ் தேவானந்தா!

Sunday, March 12th, 2017

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் நவீன வசதி வாய்ப்புகளுடன் கூடியதான கூடைப்பந்தாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முழு முயற்சிகள் முன்னெடுக்கப்படுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (12) மின்னொளியில் நடாத்தப்பட்ட இறுதிப் போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் கூடைப்பந்தாட்டத்தை வளர்த்தெடுக்கும் முகமாக பயிற்சி மைதானம் ஒன்றை அமைப்பதற்கு நாம் முன்னைய காலங்களில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். ஆனாலும் அரசியல் சூழல் மாறுபட்டிருந்த நிலையில் அது கைகூடாமல் போயிருந்தது.

IMG_20170312_195916

ஆனாலும் நாம் எடுத்துக் கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக எதிர்காலத்தில் ஏற்படும் காலமாற்றத்தில் நிச்சயம் எமது முயற்சிகள் வெற்றியளிக்குமென நான் நம்புகின்றேன்.

அவ்வாறு எமது முயற்சிகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் யாழ். மாவட்டத்தில் கூடைப்பந்தாட்ட விளையாட்டு எதிர்காலத்தில் நிச்சயம் பாரிய மாற்றங்களுடன் முன்னேற்றம் காணும் என்பது மட்டுமன்றி தேசிய ரீதியிலும் எமது வீரர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதே எனது அவாவாகும்.

அந்த வகையில் இவ்விளையாட்டுத் துறையை மேலும் வளர்த்தெடுப்பதற்கு எம்மாலான முழு முயற்சிகளையும் எதிர்காலத்தில் அக்கறையுடன் முன்னெடுக்க நாம் தயாராக இருக்கின்றோம்.

IMG_20170312_201241

அத்துடன் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பங்கெடுத்திருந்த இரு அணி வீரர்களும் வெற்றிக்காக இறுதிவரை சளைக்காமல் போராடியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

இந்நிலையில் வெற்றிபெற்ற அணி இறுமாப்புக் கொள்ளாமலும் தோல்விபெற்ற அணி துவண்டு போகாமலும் தோல்வியே வெற்றியின் முதற்படி என்பதைக் கருத்திற்கொண்டு எப்போதும் வெற்றிக்காக உழைக்க வேண்டும். இது விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமல்லாது சமூகத்தின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் நிச்சயம் வழிகோல அனுகூலமாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.

IMG_20170312_200800

இவ்விறுதிப் போட்டியில் பற்றீசியன் அணியை எதிர்த்து சென்றலைட்ஸ் அணி மோதியது. இதில் 41:46 என்ற புள்ளிகள் அடிப்படையில் சென்றலைட்ஸ் அணி வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது.

தொடர்ந்து 2016 – 2017 ஆண்டுக்கான மாவட்ட மட்டத்தில் கழகங்களின் ஆண் பெண் அணிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற கழகங்களுக்கு கூடைப்பந்தாட்ட தேசிய வீரராக யாழ். மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட வாகீசனின் தந்தையார் பரிசில்களை வழங்கி வைத்திருந்த அதேவேளை இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய கழகங்களுக்கு நிகழ்வின் பிரதம விருந்தினர் டக்ளஸ் தேவானந்தா வெற்றிக் கிண்ணங்களை வழங்கிக் கௌரவித்தார்.

இதன்போது யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் சசிகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts:

காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் வீம்புக்காகவோ, அன்றி அரசியல் காரணங்களுக்காகவோ போராட்டங்களை நடத்தவ...
டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு கைமேல் பலன் - இ.போ.ச. ஊழியர்கள் போராட்டம் நிறைவுக்கு வந்தது!
மக்களின் வாழ்க்கை முறைமைக்கும் வாழ்வாதாரத்திற்கும் நன்மை தரக் கூடிய திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி – ...

மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை நான் நிச்சயம் பெற்றுத்தருவேன் -டக்ளஸ் தேவானந்தா!
ஆபத்தில் தவித்தவர்களை விரைந்து மீட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மீண்டவர்கள் நன்றி தெரிவிப...
வரலாற்று பாட நூல்கள் தமிழர்களை அந்நியர்களாகவே தொடர்ந்தும் அடையாளம் காட்டுகின்றன – டக்ளஸ் எம்.பி. சுட...