நல்லூர் கூட்டுறவு சங்க நிர்வாகத்தை வெற்றிகொண்டது ஈ.பி.டி.பி அணி!

நல்லூர் பிரதேச கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட உறுப்பினர்கள் முழுமையாக வெற்றிபெற்றுளளனர்.
நல்லூர் பிரதேசத்திற்கான கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக தெரிவு நேற்றையதினம் நல்லூர் பிரதேசத்தின் கூட்டுறவு சபை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஏழு நிர்வாக சபை உறுப்பினர்களை கொண்ட சபைக்கான தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட பிரதிநிதிகள் வாக்கெடுப்பில் முழுமையாக வெற்றிபெற்று இவ்வருடத்திற்கான நிர்வாகத்தை தமதாக்கியுள்ளனர்.
குறித்த வெற்றியானது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாறகும். எமது கட்சி மக்களுக்கு செய்துவரும் சேவையே உண்மையானது என்பதை மக்கள் இதன்மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
எமது கட்சிக்கு கிடைத்த இந்த ஜனநாயக வெற்றியைகொண்டு ஊழல் மோசடிகள் அற்றதும் மக்களுக்கான சிறந்த சேவையை கொடுக்கக்கூடியதுமான சேவையை செய்வதற்கு வெற்றியீட்டியவர்கள் அயராது பாடுபடவேண்டும் எனவும் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள் புதிய நிர்வாகம் செயற்றிறன் மிக்கதாகவும் நேர்மையுடன் செய்யவேண்டும் எனவும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் செயற்றிறன் மிக்கவர்களிடம் மக்கள் நிர்வாக அதிகாரங்களை கொடுக்க தொடங்கியிருப்பதானது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கான மையப்புள்ளியாகவும் அமைந்துள்ளது என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதனிடையே கடந்த 30 வருடங்களாக தமிழரசுக்கட்சியின் ஆழுகைக்குள் குறித்த சுட்டுறவுச்சங்கம் முடங்கியிருந்தமை குப்பிடத்தக்கது.
Related posts:
|
|