நல்லாட்சி அரசு அரசியலுக்காக எங்களை பாவித்துவிட்டு ஏமாற்றிவிட்டது – டெங்கு ஒளிப்பு உத்தியோகத்தர்கள் குமுறல்!

Thursday, December 26th, 2019

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தற்கச்லில அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்ட டெங்கு ஒளிப்பு உத்தியோகத்தர்கள் தமக்கான நியமனத்தை நிரந்தரமக்கித் தருமாறு கடல் தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அமச்சின் அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெறும் மக்கள் சந்திப்பின் போதே அமைச்சரை சந்தித்த டெங்கு ஒளிப்பு உத்தியோகத்தர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது அவர்கள் மேலும் கூறுகையில் –

கடந்த ஆட்சியில் தாம் நிரந்தரமற்ற நியமனத்தின் அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்டோம்.

அதுமட்டுமல்லாது 2017 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை தற்காலிக உழியர்களாகவே பணிபுரிந்து வருகின்றோம். ஊதியமாக 22000 ரூபா வழங்கப்பட்டுவருகின்றது.

ஏனைய ஊழியர்களைப் போல வேறு எந்த கொடுப்பணவுகளும் தமக்கு கிடைப்பதில்லை எனவும் தெரிவித்த அவர்கள்.
நல்லாட்சியில் நிரந்தர நியமனம் பெற்று தருவதாகக் கூறி அரசியலுக்காக தம்மை பாவித்துவிட்டு பின்னர் கைவிட்டுடார்கள் என்றும்
கவலையுடன் தெரிவித்தனர்.

மேலும் கடந்த காலங்களில். சரியான தலைமையை தேர்வுசெய்வதில் தாம் தவறிழைத்துவிட்டதாகவும் இனிவரும் தேர்தலில் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு வாக்களித்து அவர் கரங்களை பலப்படுத்தி தமது நியமனங்களை மட்டுமல்லாது எமது மக்களின் அபிலாஷைகளும் நிறிவேறும் வகையில் உழைக்கத் தயாராகியுள்ளோம் என்றும் தெரிவித்திருந்தனர்.

பாதிக்கப்பட்ட ஊழியர்களது பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட அமைச்சர் துறைசார் தரப்பினருடன் தொடர்புகொண்டு

குறித்த நியமனம் தொடர்பில் ஆராய்ந்ததுடன் இது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து நியாயம் பெற்துத்தர முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் இன்னியமனத்திற்காக யாரும் எவருக்கும் கையூட்டல்கள் கொடுக்க கூடாது என்றும் அவ்வாறு தெரியவரும்பட்சத்தில்
தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இவ் நியமனத்தால் சுமார் 54 உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

வாழ்வாதாரத்தை பாதுகாக்காது வாய்ச்சவாடல் விடுவதால் பயனில்லை - கோரக்கன்கட்டு மக்கள் மத்தியில் செயலாளர்...
வடக்கில் மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களை மீட்கத் தொடர்ந்தும் போராடி வருகின்றனர் – நாடாளுமன்றில் ...
இலங்கை – இந்திய எல்லை தாண்டிய கடற்றொழிலாளர் விவகாரம்: இருநாட்டு கடற்றொழிலாளர்களது நலன்களும் பாதுகா...

தறப்பாள் கொட்டில்களில் வாழ்பவர்களுக்கு  இலகு வீடுகள் வசதியாக இருக்கும் -  நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தே...
பதவிகள் கௌரவத்திற்கு உரியவை அல்ல, அவை மக்களின் நலன்சார்ந்தவை என்பதை நிரூபித்தவர்கள் இவர்கள் - அனுதாப...
தமிழர் பிரதேசங்களில் தமிழ் மொழி அமுல்ப்படுத்தப்பட வேண்டும். - அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்!