நல்லாட்சியில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது எதிர்காலத்தை தேடி ஈ.பி.டி.பியின் தலைமையகத்தில்!

Thursday, December 26th, 2019

நல்லாட்சி அரசின் மாயைக்குள் வீழ்ந்து வாழ்வைத் தொலைத்திருந்த யாழ் மாவட்ட மக்கள் தமது வாழ்வியல் தேவைக்கான கோரிக்கைகளுடன் கடல் தொழில் மற்று நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தமது தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் தெரியப்படுத்தினர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது யாப்பானத்திலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் இன்றையதினம் மாவட்டத்திமக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது யாழ்மாவட்டத்தின் தீவகம், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த அரச உத்தியோகத்தர்கள் முதற்கொண்டு பொதுமக்கள் வரை பலதரப்பட்ட தேவைப்பாடுகளுடன் பல நூற்றுக்கணக்கான மக்கள அமைச்சரை சந்தித்து தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

அழிவு யுத்தத்தி பிடிக்குள் கிடந்த யாழ்ப்பாண மாவட்டம் இராணுவம் மீட்டதன்பின்னர் 1996 ஆம் ஆண்டு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீதர் தியேட்டரை தலைமையகமாக கொண்டு மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து வருகின்றது.
இன்னிலையில் 1996 களில் மக்கள் எவ்வாறு தமது எதிர்கால வாழ்வின் நம்பிக்கை தேடிய கோரிக்கைளுடன் வழிந்து நிரம்பினார்களோ அவ்வாறான ஒரு தேடலுன் நால்லாட்சியில் இருந்து விடுபட்டபின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை தேடி வந்தவண்ணம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


காடுகள் வளர்ந்த இடங்கள் எல்லாம் வனத்துறைக்கு சொந்தம் என்றால் மக்கள் எங்கே குடியிருப்பது? - நாடாளுமன்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய உறுதி மொழியை அடுத்து டிக்கோவிற்ற கடற்றொழிலாளர்களின் போராட்டம் கைவி...
அச்சமற்ற எதிர்காலத்தை பெற்றுத் தாருங்கள் - சீருடை விவகாரத்தில் சிக்குப்பட்டோர் அமைச்சர் டக்ளஸிடம் க...