நம்பிக்கையுடன் அணிதிரளுங்கள் : எதிர்காலத்தின் நம்பிக்கைக்கு வழிவகை செய்துதருவேன் – செட்டிக்குளம் மக்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, November 12th, 2019

நாம் கூறும் வழிமுறை நோக்கி இன்று மக்கள் அணிதிரண்டு வருவதானது தமிழ் மக்களின் எதிர்காலம் நிரந்தர அரசியல் தீர்வுகளுடன் சிறந்த முறையில் அமைவதற்கான சூழ்நிலையை உருவாக்கும் என நம்புவதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயளாலர் நாயகம் டக்ளஸ் தேவானதா தெரிவித்துள்ளார்.

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாம் எதைக் கூறி வருகின்றோமோ அதனை செய்து முடிப்பவர்கள். கக்களின் துன்ப துயரங்கள் அனைத்தையும் நான் நன்கு அறிந்தவன்.

நானும் ஒர் ஆரம்பகால போரளி என்ற வகையில் உங்களின் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுதரவேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கின்றேன்.

ஆனால் அந்த திட்டங்களை முழுமையாக செய்து காட்ட எமக்கு அரசியல் பலம் அதிகமாகத் தேவையாக உள்ளது. அந்த பலத்தை இம்முறை மக்கள் எமக்கு வழங்குவார்கள் என நாம் நம்புகின்றோம்.

அவ்வாறு அரசியல் பலத்தை நான் கூறும் ஜானாதிபதி வேட்பாளர் கோட்டபயவின் வெற்றிக்கு தமது வாக்குப்பலத்தை மக்கள் வழங்குவார்களானால் அதனூடாக நாம் உங்கள் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு கண்டுதருவேன் என்றார்.

Related posts:


டக்ளஸ் தேவானந்தாவின் வெற்றியை உறுதிசெய்வோம் - யாழ் மாவட்ட கல்லுடைக்கும் ஆலை உரிமையாளர்கள்!
எம்மால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையே மக்கள் விரும்புகிறார்...
வடக்கில் பாரிய கடல் பாசித் திட்டம் - தேவையறிந்து உதவும் இந்தியாவிற்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்...