நம்பிக்கையின் ஒளிக்கீற்றாய் அமைந்துள்ளது உங்களின் வரவு – துன்னாலை மக்கள் உருக்கம்!

நாம் அவலப்பட்டு இன்னலுற்றிருக்கும் இவ்வேளையில் நம்பிக்கையின் ஒளிக்கீற்றாய் வந்து எமக்கு நேசக்கரம் நீட்டி அறுதல் தந்துள்ளவர் நீங்களே என துன்னாலை மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் மன உருக்கத்துடன் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி, துன்னாலைப் பகுதி மக்களை கலிகை கந்தசுவாமி கோவில் முன்றலில் இன்றையதினம்(26) டக்ளஸ் தேவானந்தா சந்தித்தபோதே மக்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இம்மாதம் 9 ஆம் திகதி துன்னாலைப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின்போது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னர் அங்கு தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்களால் அங்கு ஒரு பதட்டமான நிலை தற்போதும் இருந்தவருகின்றது.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு இன்றையதினம் நேரில் விஜயம் மேற்கொண்ட டக்ளஸ் தேவானந்தா தற்போதைய நிலைமைகள் தொடர்பாக அங்குள்ள மக்களைச் சந்தித்து கேட்டறிந்துகொண்டார்.
இதன்போது மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில் நாம் அல்லும் பகலும் அவலப்பட்டும் துன்பப்பட்டும் வாழ்ந்துவரும் நிலையில், எமது நிலை தொடர்பாக இதுவரையில் எந்த அரசியல்வாதிகளும் இங்குவந்து நாம் எதிர்கொள்ளும் அவலங்கள் தொடர்பாக கேட்டறிந்துகொள்வதில் அக்கறை காட்டவில்லை.
ஆனால் நீங்கள் மட்டுமே இங்கு வந்து எம்மைச் சந்தித்து நாம் நாளாந்தம் அனுபவிக்கும் அவல நிலை தொடர்பாக கேட்டறிந்துகொள்வதில் அக்கறை காட்டியுள்ளீர்கள்.
அந்தவகையில் உங்களின் வருகையானது எமக்குள் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றை பாய்ச்சியுள்ளது.
இந்நிலையில் தங்களது ஆலோசனைக்கும் அறிவுரைக்கும் ஏற்ப நாம் நடந்தகொள்ளத்தயாராக இருக்கின்றோம் என்றும், இன்றுள்ள அச்சமான சூழ்நிலையைப் போக்கி எமது வாழ்வில் மீண்டும் இயல்பு நிலையை தோற்றுவிப்பதற்கு தாங்கள் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு என்றும் பக்கபலமாகவும் உறுதுணையாகவும் இருப்போம் என மக்கள் ஒருமித்த குரலில் கூறியிருந்தனர்.
குறித்த அசம்பாவிதத்தை அடுத்து அப்பகுதியில் உள்ள 36 பேர் இதுவரை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இற்றைவரை தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|