நடைமுறை சாத்தியமான அரசியல் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

நடைமுறை சாத்தியமான அரசியல் தொடர்பாகவும், அதன் தாற்பரியங்கள் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.டி.பி. கட்சியின் கைகளில் இருக்கின்ற காத்திரமான கருத்துக்களும் வேலைத் திட்டங்களும் மக்கள் மத்தியி்ல் கொண்டு செல்லப்பட்டு தெளிவுபடுத்தப்படுவதன் மூலமே, அந்த அரசியல் இலக்கை அடைய முடியும் எனவும் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தினை சேர்ந்த கட்சி அமைப்பாளர்கள் மற்றும் முக்கிய செயற்பாட்டாளர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதாவது, ஈ.பி.டி.பி. கட்சியின் வேலைத்திட்டம் என்பது, தேசிய நீரோட்டத்தில் இணைந்து நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படு்துவது.
தேசிய நல்லிணக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு, மக்கள் எதிர்கொள்ளுகின்ற அன்றாடப் பிரச்சினைகள் – அபிவிருத்தி – அரசியல் தீர்வு ஆகியவற்றை வென்றெடுப்பதற்கான நகர்வுகளை முன்னெப்பதே எமது வேலைத் திட்டமாகும்.
ஈ.பி.டி.பி. கட்சியை பொறுத்தவரையில், மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற அடிபபடையிலான அதிகபட்ச அதிகாரப் பகிர்வே எமது மக்களின் கௌரவமான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான சாத்தியமான அணுகுமுறை என்பதை நீணடகாலமாக வலியுறுத்தி வருகின்றது. இவையனைத்தும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று தெரிவித்தார்
000
Related posts:
|
|