நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் – எமது மக்கள் சார்ந்த நல்ல விடயங்களுக்காக ஜனாதிபதிக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்க வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தயாராகவே இருக்கின்றோம் -அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, November 20th, 2022

நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும், எதிர்காலத்தில் நடக்க  இருக்கும் எமது மக்கள் சார்ந்த நல்ல விடயங்களுக்காக ஜனாதிபதிக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தயாராக இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவில் நடைபெற்ற ஜனாதிபதி அலுவலகத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ள  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இவ்விடயம் தொடர்பாக, தமிழ் மக்களின் கோரிக்கைகளை அறிவதுடன், கடந்த கால யுத்தம், பங்கரவாத நடவடிக்கை போன்றவற்றினால் தென்னிலங்ககையில் மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்கள் தொடர்பாக அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

அதேபோன்று, முஸ்லீம் மக்கள் மற்றும் மலையக மக்கள் ஆகியோருடனும் கலந்தூரையாடி, பொதுவான பொறிமுறையை அடையாளம் காண வேண்டும் என்று ஜனாதிபதி ரணில விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும், எதிர்காலத்தில் நடக்க  இருக்கும் எமது மக்கள் சார்ந்த நல்ல விடயங்களுக்காக ஜனாதிபதிக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தயாராக இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், உங்களது வேலைத்திட்டங்களுக்கு எமது ஆதரவை வழங்கும். அதேநேரம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்” எனக் கூறியிருந்தார்..

முன்பதாக

வவுனியாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்ட நிகழ்வில் வழமைக்கு மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டிருந்தார்.

இதேவேளை ஜனாதிபதியின் இணைப்பு செயலக திறப்பு விழாவில் எம். ஏ சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் சி. வி. கே சிவஞானமும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

Related posts:

யாழ் மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டறவு சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன...
கூட்டமைப்பினரால் அதிகாரப் பரவலாக்கக்தை கொண்டுவர முடியாமற் போனது ஏன்? – டக்ளஸ் எம்.பி. கேள்வி!
சம்பூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்க...