நச்சுக் காற்றை புறந்தள்ளுங்கள் ஆரோக்கியமான காற்றை பெற்றுத் தருகிறேன் – கிளி. மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!

Thursday, October 1st, 2020

நச்சுக் காற்றை புறந்தள்ளி ஆரோக்கியமான காற்றை பெற்றுத் தருவேன் என்று கிளிநொச்சி மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இன்று (01.10.2020) இடம்பெற்ற கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தினை  1AB பாடசாலையாக தரமுயர்த்தும் உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர்  அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் –

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தவறான முடிவுகள் காரணமாக நாம் இருந்ததையும் இழந்து நிற்பதுவே எமது வரலாற்று அனுபவமாக இருக்கின்றது என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், தற்போதும் சில அரசியல் சக்திகள் தங்களுடைய குறுகிய சுயநலன்களுக்காக மக்களை தவறாக வழிநடத்துவதாவும் அதற்கு மக்கள் பலியாகி விடக்கூடாது எனவும் கேட்டுக் கொண்டதுடன் மக்கள் கடந்த காலங்களைப் போன்று நச்சுக் காற்றை வாழ்வை மீண்டும் ஆரோக்கியமற்ற சூழலுக்குள் தள்ளிக் கொள்ளக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டார்.

அதனை தொடர்ந்து, இராமநாதபுரம் கிழக்கு அ.த.க.பாடசாலையை தரமுயர்த்தும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர், சரியான வழிமுறையின் ஊடாக விடயங்களை அணுகுவதன் மூலம் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பாடசாலை தரம் உயர்த்தப்படுகின்ற முயற்சிக்கு கிடைத்த வெற்றி  அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறி்ப்பிடத்தக்கது.

Related posts:

மக்களின் சொந்த காணி, நிலங்கள் பல இன்னமும் படையினரின் கட்டப்பாட்டுக்குள் இருக்கின்றன - நாடாளுமன்றில் ...
அரசு நல்லிணக்கத்தை வெளிப்படுத்த தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் - டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
கிளிநொச்சி மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகப் பிரச்சினைக்குத் தீர்வு: அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

வடக்கு - கிழக்கு மக்களுக்கும் வரப்பிரசாதமான மொரகஹகந்த - களுகங்கை நீர் விநியோகத்திட்டம்! ஜனாதிபதிக்க...
மனதாபிமான முறையில் ஓர் அரசியல் தீரமானம் எடுத்து, தடுத்து வைத்திருக்கின்ற அரசியல் கைதிகளை விடுதலை செய...
ஒன்றிணைந்த செயற்பாடுகளே எதிர்காலத்தை வளமாக்கும் – யாழ் பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர்களுடனான சந்திப்பில்...