தோழர் விக்னராஜா வேதநாயகத்தின் புகழுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா கட்சிக்கொடி போர்த்தி இறுதி அஞ்சலி மரியாதை!

அமரர் தோழர் விக்கினராஜா வேதநாயகத்தின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தியதுடன் கட்சிக்கொடி போர்த்தி மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கொழும்பில் லங்கா மலச்சாலையில் வைக்கப்பட்டிருந்த அன்னாரது புகழுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி செலுத்தினார்.
புகழுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியபின்னர் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் டக்ளஸ் தேவானந்தா ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.
இதன்போது கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின் மற்றும் திருகோணமலை மாவட்ட கட்சியின் நிர்வாக செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.
காலஞ்சென்ற தோழர் விக்கினராஜா வேதநாயகத்தின் அவர்களின் இறுதிக்கிரியைகள் நாளையதினம் (24) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|