தோழர் ஜெகனின் தந்தையாரின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரியாதை!

Sunday, November 28th, 2021

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் ஜெகனின் தந்தையார் கார்த்திகேசு வேலும்மயிலும் அவர்களின் பூதவுடலுக்கு கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

முன்பதாக வயது மூப்பின் காரணமாக சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அமரர் கார்த்திகேசு வேலும்மயிலும் கடந்த 25.11.2021 அன்று காலமானார்.

இந்நிலையில் இன்றையதினம் (28) வட்டுக்கோட்டையிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமரரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.

Related posts:

மலைய மக்களின் உரிமைக்காகவும் நாம் போராடினோம்  - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவ...
தமிழ் மக்களின் வாழ்வை கட்டியெழுப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்....
எக்ஸ்பிரஸ் பேர்ள் அனர்த்தம்: பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவது தொடர்பில் அமைச்சர்...