தோழர் சந்திரமோகனின்  நீங்காத நினைவுகளில்…

Wednesday, July 5th, 2017

ஈழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான தோழர் சந்திரமோகன் அவர்கள் ஈழ மக்களைவிட்டுப் பிரிந்து இன்று ஒருவருடம் நிறைவடைகின்றது. அவர் 05.07.2017 ஆம் திகதி கொழும்பில் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

அவரின் தனித்துவமான கருத்துக்களும், அவரோடு பழகிய ஞாபகங்களும் அவர் இல்லாத இடைவெளியை அதிகரித்தபடியே இருக்கின்றது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நீண்ட பயணத்தில் தோழர் சந்திரமோகன் அவர்களும் தோழோடு தோழ் கொடுத்து வழங்கிய பங்களிப்பு ஈடற்றவையாகும். இறுக்கமான எனது பொழுதுகளை பெரும்பாலும் இலகுவாக்கிய சிறந்த நண்பனாக தோழர் சந்திரமோகன் இருந்திருக்கின்றார்.

ஈழ மக்களின் கௌரவமான அரசியல் எதிர்காலத்திற்கான கனவை சுமந்து தனது இறுதிக்காலம்வரை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடன் செயற்பட்ட தோழர் சந்திரமோகன் அவர்கள் என்றும் நினைவில் நிறைந்து இருப்பார்.

Related posts:


நாவலர் கலாசார மண்டப வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
நான் பிரச்சினைகளை முன்வைப்பது தீர்வு தேவை என்பதற்காகவே – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
கட்சியின் கொள்கை நடைமுறைகளுக்கு இணங்க மக்களது நலன்களை முன்னிறுத்தி ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் – கட்ச...