தோற்றுப்போன இனம் என்ற உணர்வை மாற்றுதற்கு ஒத்துழையுங்கள்: மலையாள புரம் மககள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை!

Saturday, August 1st, 2020

தோற்றுப் போன இனம் என்ற நிலை மாற்றப்ட்டு  மக்களாகிய நீங்கள் வெல்ல வேண்டும் என்றால் வீணைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.  அந்த மாற்றம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  நிகழுமேயானால்  மக்களாகிய நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்

கிளிநொச்சி, மலையாளபுரம் பிரதேசத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஆம் ஆண்டுக்குப் பின்னர், நடைபெற்ற தேர்தல்களில் மக்கள சுயநலமிகளுக்கு வாக்களித்தமையினால் கட்சிகள் வெற்றி பெற்றனவே தவிர மக்கள் தோல்வியடைந்த உணர்வுகளுடனேயே இருந்து வருகின்றனர்.

எனவே, வெற்றியடைந்த உணர்வினை மக்கள்  பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் ஈழ மககள் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிக்கமாறு அமைச்சர் தெரிவி்த்தார்.

மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தி கெளரவமான வாழ்வியலை ஏற்படுத்தித் தருவதற்தெகான வேலைத் திட்டமும் அவற்றை நிறைவேற்றுவதற்கான பொறிமுறையும் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், கிளிநொச்சியில் காணப்படும் விவசாய நிலங்களை பலன் தரும் பூமியாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தருவதாகவும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: