தொழில் புரிய முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பரிந்துரை !

Thursday, May 7th, 2020

முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சிகையலகரிப்பாளர் போன்ற தொழில்களை மேற்கொண்டு வருகின்றவர்களுக்கும் 5000 ரூபாய் உதவித் தொகையை வழங்க வேண்டும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அமைச்சரவைக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தின்போதே கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்படி பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொறோனா ரைவஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 20 ஆம் திகதியில் இருந்து நாடளாவிய ரீதியில் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனால் உள்ளூராட்சி மன்றங்களினால் உள்வாங்கப்படாத முன்பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களுடைய வருமானத்தை இழந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைப் போன்று வருமானத்தை இழந்துள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சிகையலகரிப்பாளர் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் அரசாங்கம் 5000 ரூபாய் உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று பரிந்துரைந்தார்.

ஏற்கனவே, அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போதைய அசாதாரண சூழலில் சமுர்த்தி பயனார்களுக்கு உதவித் தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிந்த நிலையில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் மேற்குறித்த பரிந்துரையை மேற்கொண்டுள்ளார்.

Related posts:

பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி மீளக் கட்டியெழுப்பப்படும் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு செயல...
கிழக்கின் தொல்லியல் செயலணிக்கு இருவரை பரிந்துரையுங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஜனாதிபதி பண...
அதிகார துஸ்பிரயோகத்தை கண்டித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு யாழ் மாவட்ட அரச அதிகாரிகள் வாழ்த்து!