தொழில்வாய்ப்பு கேட்பதால் இன உரிமையை அடகு வைக்க வேண்டி வரும் என சுயலாப தமிழ் அரசியல் தலைமைகள் போல் கூறி என்னால் எமது மக்களை ஏமாற்ற முடியாது – டக்ளஸ் எம்.பி!

Wednesday, December 6th, 2017

இன ஐக்கியமோ, தேசிய நல்லிணக்கமோ, எது ஏற்பட வேண்டுமென்றாலும், முதலில் எமது மக்கள் பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்தப்படல் வேண்டும். எமது இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளைக் கேட்பதால் எமது இன உரிமையை அடகு வைக்க வேண்டி வரும் என சுயலாப தமிழ் அரசியல் தலைமைகள்போல் கூறி, என்னால் எமது மக்களை ஏமாற்ற முடியாது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பொது நிர்வாக, முகாமைத்துவம், உள்நாட்டலுவல்கள், உள்@ராட்சி மற்றும் மாகாண சபைகள் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது மக்களின் அரசியல் உரிமைகளைக் கேட்பது, தொழில் உரிமைகளைக் கேட்பது, அடிப்படை உரிமைகளைக் கேட்பது என்பது இனவாதமாகப் பார்க்கக்கூடாது. இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தவதற்கு அர்ப்பணிப்புடன் – உயிரையும் பணயம் வைத்து – நேர்மையுடன் அன்று முதல் இன்று வரை செயற்பட்டு வருபவன் நான். அந்த வகையில், இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை மேலும் வலுப்படுத்துவதற்கும், தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்குமே இந்தக் கோரிக்கைளை நான் முன்வைக்கின்றேன என தெரிவித்துள்ளார்.

Untitled-9 copy

Related posts:


தமிழ் மக்களின் உரிமைப்போராட்ட வரலாற்றின் உயிர்த்துடிப்புள்ள பாத்திரமாக திகழ்ந்தவர் மங்கையற்கரசி அம்ம...
தீராப் பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வு காணப்படவேண்டும் என்பதில் அக்கறையுடன் உழைத்து வருகின்றோம்...
கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் ட...