தொடர்ந்தும் பதில் பணியாளர்களாக தொடர்வதற்கு ஆவண செய்யுங்கள் – யாழ். தபால் நிலையத்தில் பதில் பணியாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!
Friday, November 5th, 2021யாழ். தபால் நிலையத்தில் பதில் பணியாளர்களாக கடந்த நான்கு வருடங்களாக பணியாற்றி வரும் பணியாளர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தாம் தொடர்ந்தும் பதில் பணியாளர்களாக தொடர்வதற்கு ஆவண செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.ஷ
இது தொடர்பாக குறித்த ஊழியர்கள் இன்று காலை அமைச்சரின் யாழ் அலுவலகத்திற்கு வருகைதந்து தமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியிரந்தனர்.
இதன்போதே குறித்த விடயத்தை கோரியிருந்ததுடன் தபால் நிலையத்தின் ஏனைய பிரிவுகளில் தொழில் புரிவதற்கு தாங்கள் விரும்பவில்லை எனவும் தமது எதிர்பார்ப்புக்களை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே
வட மாகாண இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்களின் வட மாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தது செயற்பாடுகள் தொடர்பான பல்வேறு விடயங்களை கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை யாழ். பல்கலைக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றுகின்ற சிற்றூழியர்களும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமக்கு நிரந்தர நியமனங்களை பெற்றுத் தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|