தொடரும் சீரற்ற காலநிலை – கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் விழிப்புணர்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Tuesday, November 9th, 2021

சீரற்ற காலநிலையினால் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் கண்காணிப்பு மற்றும்  விழிப்புணர்வு செயற்பாட்டை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியுள்ளார்.

தற்போது நிலவி வருகின்ற சீரற்ற காலநிலையினால் கடற்றொழிலாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்ளாத வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போதே கடற்றொழில் அமைச்சரினால் மேற்குறிப்பிடப்பட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்நாயக்க மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த ஆகியோருடனான ஆலோசனைக் கூட்டத்தில்,  காலநிலை மாற்றங்கள் தொடர்பான விபரங்களையும், மேற்கொள்ள வேண்டிய முன்னடிவடிக்கைகள் தொடர்பாகவும் உடனுக்குடன் கடற்றொழிலாளர்களுக்கு அறியக் கிடைக்கும் வகையில்  கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட கட்டமைப்புக்களை செயற்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

Related posts: