தையிட்டி இறங்கு துறை பிரதேசத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் – கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் ஆராய்வு!

Saturday, June 13th, 2020

தையிட்டி இறங்கு துறை  பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,  குறித்த பிரதேச கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

இதன்போது, இறங்குதுறை பிரதேசம் தூர்வாரப்பட்டு புனரமைக்கப்பட வேண்டும் என்றும் கடற்றொழிலாளர்களுக்கான ஓய்வு மண்டபம் மற்றும் மலசல கூடம் போன்றவற்றை அமைத்து தருமாறு கோரிகை முன்வைக்கப்பட்டது.

குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் யாழ்.மாவட்ட உதவிப் பணிப்பாளருக்கு அமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Related posts: