தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அனுமதியுடன் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

Wednesday, August 28th, 2024

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அனுமதியுடன் இன்றையதினம் (28) காலை இடம்பெற்றது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இணைத்தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான பி.எஸ்.எம்.சாள்ஸின் பிரசன்னத்துடன் யாழ்ப்பாண பதில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன்  பங்குபற்றலுடன் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், முப்படை உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அரச திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

000

Related posts:

எமக்கென்று வாக்களிக்கப்பட்ட பூமியில் நித்திய சமாதானமும் நீடித்த மகிழ்ச்சியும் நிலவட்டும் – நத்தார் வ...
வடக்கில் துயரங்கள் தொடர்வதற்கு வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்றவர்களே காரணம் - நாடாளுமன்றில் செயலாளர் ந...
வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஆராய்வு!