தேசிய பாதுகாப்பு தெரு நாடகமானால் முதலீட்டாளர்கள் திரும்பியும் பார்க்கமாட்டார்கள் – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Friday, June 7th, 2019

பாதுகாப்பு தொடர்புபட்ட அண்மைக்கால சம்பவங்கள் முதலீட்டாளர்களின் உணர்வுகளை, அபிப்பிராயங்களை தாக்குவதாக உலக வங்கி தெரிவித்திருக்கின்றது. இன்று நீங்கள் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான இரகசியங்களை தெரு நாடகமாக்கி, ஊடகங்களிலே காட்டிக் கொண்டிருக்கின்றீர்கள். ஒரு முதலீட்டாளராவது இந்த நாட்டின் பக்கமாக தலைவைத்துப் படுக்கவும் மாட்டார் என்றே உங்களது செயல்கள் நிரூபித்து வருகின்றன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த நாட்டில் இதுவரையில் எத்தனையோ பாரதூரமான ஊழல், மோசடிகள் இடம்பெற்றுள்ளன. பொது மக்களது பணம் பட்டப்பகலிலே கொள்ளையிடப்பட்டுள்ள சந்தர்ப்பங்கள் ஏராளமாக ஏற்பட்டுள்ளன. இவை பற்றி எல்லாம் இத்தகைய பகிரங்கமான விசாரணைகள் மேற்கொண்டு, மக்களுக்கு உண்மைகளை வெளிக் கொண்டு வராமல், ஒரு நாட்டின் பாதுகாப்பு தொர்பிலான உள்விவகாரங்களை இவ்வாறு பகிரங்கப்படுத்திக் கொண்டிருப்பது, இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எந்த வகையில் நன்மை பயக்கும் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்? எனக் கேட்க விரும்புகின்றேன்.

எனவே, தேசிய பாதுகாப்பினை அரசியலாக்கி, அதனை நாசப்படுத்தி விடாதீர்கள் என்றே கேட்டுக் கொள்கின்றேன். ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பின் பலம், இரகசியத் தன்மை, மதிப்பு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது பற்றி நாட்டு நலன்களில் அக்கறையுள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

இந்த நாட்டில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும். அதேநேரம், தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்புகள் ஏற்படுகின்ற எந்தவொரு விடயமும் தடைசெய்யப்பட வேண்டும். அந்த வகையில் பேணப்படுகின்ற தேசிய பாதுகாப்பின் ஊடாக தேசிய நல்லிணக்கமானது உணர்வுபு;பூர்வமாக – செயற்பாட்டு ரீதியில் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதையே நான் மீண்டும், மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

எந்தவொரு அரசியல் கட்சியின் விருப்பு, வெறுப்புகளுக்கேற்ப தேசிய பாதுகாப்பை வளைந்து கொடுக்கத்தக்க வகையில் மாற்றியைமைத்துக் கொள்ளக் கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


தொழிலைத் தேடிக் கொள்ள இயலுமான வகையில் கல்வி முறைமை உருவாக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்களஸ் தேவ...
பனம் தொழில் துறை சார்ந்த மக்களின் வாழ்வுக்கு ஒளி கொடுத்தவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - அல்லைப்பிட்டி...
எங்கள் மண்ணின் வாழ்வாதாரமான பனைவளத்தை அழிவிலிருந்து காப்பாற்றவேண்டும் - டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!