தேசிய நல்லிணக்கம் என்பது எமது மக்கள் மத்தியில் சாத்தியமற்ற விடயமாகவே இருக்கிறது –  நாடாளு மன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Monday, February 19th, 2018

மக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சமூகக் கடப்பாட்டு இடைவெளியானது அதிகரித்துள்ள நிலையில், அம் மக்கள் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகின்ற பிரதிநிதிகள் என்ற வகையில் இந்தப் பிரதிநிதிகள் ஊடான அம் மக்களின் தேவைகள் – பிரச்சினைகள் என்பன தேங்கிக் கிடக்கின்ற நிலைமையினை அவதானத்தில் கொள்ள வேண்டும என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவையின் இறுதி வரைவு தொடர்பான விவாதத்தில் இன்றையதினம் கலந்துகொண்ட உரையாற்றுiகியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் –

எமது மக்கள் மத்தியில் ஏற்படக்கூடாது என்பதற்காகவே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாங்கள் தொடர்ந்தும் எமது மக்கள் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்ற ஒரு கொள்கையை தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றோம். இந்தக் கொள்கை வழியானது, எமது மக்களையும், எமது மக்களது தேவைகள் மற்றும் பிரச்சினைகளையும் தெளிவுற புரிந்து கொள்வதற்கும், அவற்றைத் தீர்ப்பதற்கும் எமக்கு உறுதுணையாக இருக்கின்றது.

இத்தகையதொரு நிலையில்தான் மீண்டும் வரக்கூடிய தேர்தல்களில் எமது மக்களின் வாக்ககுளைப் பெறுவதற்காக இனவாதம் போன்ற மிகவும் இலகுவில் பேசக்கூடிய இனவாதக் கருத்துகள் இவர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் அதனது பாரதூரமான விளைவுகள் பற்றி அக்கறை கொள்ளப்படாத காரணத்தினால், எமது மக்களிடையே அவ்விதமான – மனிதாபிமானமற்ற கருத்தியல்கள் பதியப்பட்டு விடுகின்றன.

இவ்வாறான நிலையில், இனவாதம் கதைத்து, மக்களது வாக்குகளை ஒரு தரப்பினர் பெற்றுக் கொள்கின்ற நிலையில், அத்தரப்பினரை தோற்கடித்து எமது மக்களின் வாக்குகளைப் பெற எண்ணுகின்ற மற்றைய தரப்பினர், முன்னைய தரப்பினரைவிட அதிகளவில் இனவாதம் கதைக்கவே முற்படுகின்றனர். இந்த நிலை, வடக்கில் மட்டுமன்றி, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தொடர்ந்தேர்ச்சியாக இடம்பெற்று வருவதால், யுத்தத்திற்கு பின்னரான எமது நாட்டில் தேசிய நல்லிணக்கம் என்பது எமது மக்கள் மத்தியில் இன்னமும் அடிப்படை சாத்தியமற்ற விடயமாகவே இருந்து வருகின்றது.

Related posts:


வடக்கில் ஏற்பட்டுள்ள வர்த்தகப் பொருளாதார  வீழ்ச்சி மேம்படுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ்...
நிலையற்ற அரசியல் தலைமையே வடக்கின் சமூக சீர்கேடுகளுக்குக் காரணம் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெர...
நல்லாட்சியில் அதிபர் சேவை நியமனத்தில் அநீதி - நியாயம் பெற்றுத்தரக் கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவ...