தேசிய உற்பத்தியுடன் கூடிய சுய பொருளாதார வளர்ச்சி நாட்டுக்கு எவ்வளவு அவசியமோ, அதேபோன்று தேசிய நல்லிணக்கமும் அவசியமாகும் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Saturday, November 21st, 2020இந்த நாட்டைப் பொறுத்தவரையிலும் எதிர்க்கட்சிகள் அதனை சிறப்பாகவே செய்து வருகின்றன. ‘பாடுவது தேவாரம். இடிப்பது சிவன் கோவில்’ என்பது போல், எமது தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிராகவும், நாடாளுமன்றத்தில் எதிர்த் தரப்பிலும் காலம் தள்ளுகின்ற போலி தமிழ்த் தேசியத்தை ஒட்டிக் கொண்டுள்ள சுயலாப அரசியல்வாதிகள், அனர்த்தத்திலிருந்து அரசியல் வரையில் அனைத்தையும் இனவாதமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
தேசிய நல்லிணக்கத்துடன் கூடிய பயணத்துக்கு நொண்டியடிக்கின்ற இவர்கள், எமது மக்களின் வாக்குகளை வைத்துக் கொண்டு, எமது மக்களுக்காகக் கதைப்பதாகக் கூறிக் கொண்டு, எமது மக்களை இனவாதிகளாக ஏனைய மக்களுக்கு மலிவாக அடகு வைக்கின்ற நடவடிக்கைகளையே தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்கள்.
தேசிய உற்பத்தியுடன் கூடிய சுய பொருளாதார வளர்ச்சி இந்த நாட்டுக்கு எவ்வளவு அவசியமோ, அதேபோன்றுதான் தேசிய நல்லிணக்கமும் அவசியமாகும் என்பதையே நான் வலியுறுத்த விரும்புகின்றேன். அதாவது, இரு கைகளும் இணைந்து ஓசை எழுப்புவது போல், சகல தரப்பினரும் இணைந்தே இதனை மேற்கொள்ள வேண்டும்.
Related posts:
|
|