தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் 10 நாள்களில் 10 ஆயிரம் கட்டில்கள் திட்டம் – வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளரிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்தார் அமைச்சர் டக்ளஸ்!

Tuesday, May 18th, 2021

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பத்து நாட்களில் பத்தாயிரம் கட்டில்கள் திட்டத்தின் அடிப்படையில் யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் உருவாக்கப்பட்ட 165  கட்டில்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரனிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பத்து நாள்களில் பத்தாயிரம் கட்டில்கள் திட்டத்தின் அடிப்படையில் யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் உருவாக்கப்பட்ட கட்டில்களையே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி கேதீஸ்வரனிடம் இன்றையதினம் கையளித்துள்ளார்.

குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் யாழ்மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

முன்பதாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 10 நாட்களுக்குள் பத்தாயிரம் கட்டில்களை வழங்குவதற்கான ஒரு துரித வேலைத்திட்டம் பல இடங்களில் அமைச்சர் நாமல் ராஜபக்ச தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

கொவிட் நோயாளர்களுக்கான இந்த கட்டில்களை தயாரிப்பதற்கு நாட்டின் பல நிறுவனங்கள் முன் வந்திருந்த நிலையில் நாட்டின் அனைத்த மாவட்டங்களிலுமுள்ள தேசிய இளைஞர் சேவைகள் தொழில் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த இளைஞர்களும் யுவதிகளும் இந்த கட்டில்களை தயாரிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் இன்றையதினம் யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் தலா பத்து கட்டில்கள் தயார்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி கேதீஸ்வரனிடம் அவற்றை கையளித்திருந்தர்.

குறித்த கட்டில்கள் வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

தற்கொலையிலிருந்து மக்களைக் காப்பாற்ற மத்திய அரசிடமோ மாகாண அரசிடமோ உரிய திட்டங்கள் எதுவும் கிடையாது!
எமது நாட்டின் கல்விக் கொள்கையால் மாணவர்கள் புத்தகப் பைகளைச் சுமந்தே கூனாகிப் போய்விடுகின்றனர் - டக்ள...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு பூசை வழிபாடுகள்!

வடக்கில் வாக்காளர் பதிவை சொந்த வதிவிடத்தில் பதிய முடியவில்லை -  டக்ளஸ் தேவானந்தா சபையில் சுட்டிக்காட...
ஊழல், மோசடிகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற கருத்துகள் யாவும் வெறும் அரசியல் பேசு பொருளாகவ...
பருத்தித்துறை, பேசாலை, குருநகரிலும் விரைவில் மீன்பிடி துறைமுகங்கள் உருவாக்கப்படும் - அந்தந்த பிரதேச...