தேசியக் கூட்டு! ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!!

ஈ.பி.டி.பியின் எதிர்காலச் செயற்பாடுகள் பலதளங்களிலும் முன்னெடுக்கப்படவேண்டும் என்று கடந்த 8ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றகட்சியின் பொதுச் சபைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைவாகதேசியக் கட்சிகளுடன் கூட்டுமற்றும் பிராந்தியக் கட்சிகளுடன் கூட்டுஎனும் வேலைத் திட்டத்தின் பிரகாரம் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனான தேசியக் கூட்டுமற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றது.
ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீரவின் ஏற்பாட்டில் ஜனாதிபதியின் வாசஸ்தளத்தில் அன்மையில் நடைபெற்றசந்திப்பில் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பலப்படுத்தி எதிர்காலச் சவால்களை எதிர் கொள்ளும் விதமாக முன்னோக்கிச் செல்வது யுத்தப்பாதிப்புக்குள்ளான வடக்கு கிழக்கில் அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் புதிய தேர்தல் முறைமை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதி தலைமையிலான சந்திப்பின்போது அமைச்சர்களான மகிந்த அமரவீர பைசர் முஸ்தப்பா மற்றும் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாதலைமையிலானகட்சிப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
Related posts:
|
|