தேசமெங்கும் நிரந்தர ஒளிவீச தீபச்சுடர்கள் ஏற்றுவோம்! – தீபாவளி வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!

Friday, October 28th, 2016

தீபத்திருநாளைக் கொண்டாடும் அனைவரது இல்லங்கள் தோறும் இருள் நீங்கி  நிரந்தர ஒளி பரவட்டும் என்றும், துயரங்கள் அகன்று எங்கும் மகிழ்ச்சி நிலவட்டும் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வாழ்த்துச் செய்தியில்-

தமிழ் மக்களின் வாழ்விடங்கள் தோறும் வதைகளும், வலிகளும், வன்முறை கலாச்சாரமும் நிலவிய இருண்ட யுகம் விடை பெற்று சென்றிருந்தாலும் ..

இன்னமும் அதன் எச்சங்கள் எமது மக்களின் வாழ்வில் துயரங்களை சுமத்தும் வடுக்களாக ஆங்காங்கே தொடர்வதை தடுத்து நிறுத்திட…

மக்களின் அவலங்களிலும் இழப்புகளிலும் இன்னமும் சுயலாபம் அடையத்துடிக்கும் தீயவர்களின் செயல்களை அறுத்திட….

சூழ்ந்து வரும் சூழ்சிகளை வென்று, சரிந்து கிடக்கும் எமது மக்களின் வாழ்வியல் உரிமைகளை மேலும் தூக்கி நிறுத்திட….

உறுதி கொள்ளும் தினங்களின் ஒன்றாக தீபத்திருநாளை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்போம். மாற்றங்கள் நிகழவேண்டிய அரிய இத்தருணங்களிலும் இன்னமும் மாறாதிருக்கும் அரசியல் மாற்றங்களுக்காக எமது மக்களை விழிப்படைய வைப்போம்.

வெறும் ஏமாற்றங்களால் துவண்டு போயிருக்கும் எமது மக்களின் மனங்களிலும் நம்பிக்கை ஒளிகளை ஏற்றிட…

எமது சொந்த நிலத்தில் எமது மக்கள் சுதந்திர பிரஜைகளாக நிமிர்ந்தெழும் காலத்தை வென்றிட…. எமது மதிநுட்ப சிந்தனையின் வழி நின்று உறுதியுடன் உழைப்போம். இவ்வாறு தெரிவித்திருக்கும் அந்த வாழ்த்து செய்தியில் பிறந்து வரும் தீபத்திருநாளில் எமது மக்கள் ஏற்றும் சுடர்கள் நிரந்தர ஒளியாக எங்கும் வீசும் எதிர்காலத்தை படைப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Deepavali

Related posts:

வடக்கின் பொருளாதார மேம்பாட்டிற்கு கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சின் பங்களிப்பு மிக அவசியம் - ...
மாகாணசபை முறைமை உரிமை போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட...
கூட்டமைப்பின் தடையினால் வெடுக்குநாரி விவகாரத்தை தீர்க்க முடியவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்...