தெளிவான கொள்கையும் கூர்மையான பார்வையும் ஈ.பி.டி.பி. யிடம் இருக்கிறது: சரவணையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Saturday, July 25th, 2020

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் தெளிவான கொள்கையும் கூர்மையான பார்வையும் இருக்கின்றமையை வரலாறு தொடர்ச்சியாக நிரூபித்து வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏனைய தமிழ் தரப்புக்களும் குறித்த கொள்கையை ஏற்றுக் கொள்ளும் வகையில் அண்மைக் காலமாக கருத்து தெரிவித்து  வருகின்றமையை சுட்டிக் காட்டினார்.

சரவணை சோழாவத்தை பிரதேசத்தில் இன்று  ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுயைில் –

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியைப் பொறுத்த வரையில் ஆரம்பம் தொடக்கம் இன்றுவரை கொள்கையில் உறுதியாக நின்று அதனை அடைவதற்கான வழியில் நிதானமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது.

ஈ.பி.டி.பி. தன்னுடைய அரசியல் வேலைத் திட்டத்தினை தீவகத்தில் ஆரம்பித்த போது எவ்வாறான கொள்கையுடன் வந்திறங்கியதோ அதேகொள்கையுடனேயே இப்போதும் செயற்படுகிறது.

கட்சி உறுப்பினர்கள் யாராவது தவறு இழைத்திருப்பார்களாயின், அது தனிநபர் செயற்பாடாக இருக்குமே தவிர கட்சியின் கொள்கையாக இருக்க முடியாது. எனினும் கட்சித் தலைவர் என்ற வகையில் அதற்கான பொறுப்பை ஏற்கத் தவறுவதில்லை எனத் தெரிவித்தார்.

மேலும்,  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கோட்டையாக விளங்கும் தீவகப் பிரதேசத்தில்கூட ஏராளமான வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதாக தெரிவித்த அமைச்சர் கடந்த காலங்களில் போதிய அரசியல் அதிகாரங்கள் கிடைக்காமை காரணமாக இந்த நிலை தொடர்வதாகவும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போதிய அதிகாரங்களை மக்கள் வழங்குவார்களாயின் மக்களின் அனைத்து அபிலாசைகளும் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வேலனை, துறையூர் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


படைகளும், பொலிசாரும் அந்தந்த மாவட்டங்களின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப நிலை கொண்டிருத்தல் வேண்டும்!
விளப்பமில்லா ஆட்சியை மக்களால் விளங்க முடியவில்லை? - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
வன்னேரிக்குளம் மக்களின் எதிர்பார்ப்புக்கள் ஒருபோதும் வீண்போகாது - டக்ளஸ் எம்.பி. நம்பிக்கை தெரிவிப்ப...