தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையின் குறைபாடுகள் தீர்க்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Wednesday, March 27th, 2019

ஒரு தேசிய வைத்தியசாலைக்கான தேவை வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்றது. இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை, வவுனியா பொது வைத்தியசாலை போன்றவற்றைத் தவிர்த்துப் பார்க்கின்றபோது மிக அதிகளவிலான நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்ற வைத்தியசாலையாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை காணப்படுகின்றது.

கடந்த வருடத்தில் மாத்திரம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கிட்டத்தட்ட 36 ஆயிரத்து 400 நோயாளர்கள் சிகிச்சைப் பெற்றுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இவ் வைத்தியசாலை மாகாண சபையின் கீழ் செயற்பட்டு வருவதால் அதற்காக ஒதுக்கப்படுகின்ற நிதி மானியங்கள் போதாமையாக இருப்பதாகவும், வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்படுகின்ற சுகாதாரத்துறை சார்ந்த நிதியில் அதிகளவு நிதியை மேற்படி வைத்தியசாலைக்கென ஒதுக்கப்படுகின்றபோது, ஏனைய மாகாண வைத்தியசாலைகள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

எனவே, அந்தந்த மாகாணங்களில் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கி வருகின்ற வைத்தியசாலைகளுக்கு என மாகாண சபைகளுக்கு மிக அதிகளவிலான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:

யாழில் பலரைப் பாதித்துவரும் தென்னிலங்கை நிதி நிறுவனம் உடன் தடை செய்யப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்த...
வீட்டுத் திட்டங்கள் மக்களை கடனாளிகளாக்கிவிட்டது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி சுட்டிக்காட்டு!
வவுனியா கருங்காலிக்குளம் அ.த.க. பாடசாலை, புதுகுளம் மகா வித்தியாலய மெய்வல்லுநர் போட்டிகளில் அமைச்சர் ...